Wednesday, February 28, 2018

வங்கக்கடலிலும் தமிழன் பிணம் மிதக்குது

வங்கக்கடலிலும் தமிழன் பிணம் மிதக்குது
கடப்பா ஏரியிலும் தமிழன் பிணம் மிதக்குது
இந்திய அரசு பக்கோடா தேசியம் பேசுது
தமிழக அரசு மோடி அரசை நக்குது
தமிழ் இனம் செய்வறியாது திகைத்து நிக்குது!
புயல் வந்து வங்கக்கடலில் தமிழர் பிணங்கள் மிதந்தபோதும் இந்திய அரசு மீட்டு தரவில்லை.
இப்போது கடப்பாவில் ஏரியில் தமிழர் பிணங்கள் மிதக்கும்போது இந்திய அரசு இதுகுறித்து விசாரணை செய்ய முன்வரவில்லை.
ஒரு பசு கொல்லப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு தமிழன் கொல்லப்பட்டால் அக்கறையற்று இருக்கிறது.
இந்தியாவில் ஒரு மாட்டுக்கு இருக்கும் மதிப்புகூட தமிழ் இனத்திற்கு இல்லை.
தமிழ் இனம்,
காவிரியில் தண்ணீர் பெற முடியவில்லை
புயல் பாதிப்பிற்கு நிவாரணம் பெற முடியவில்லை
நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியவில்லை
ஏனென்றால் தமிழன் கையில் அதிகாரம் இல்லை.
தமிழனுக்கு என்று ஒரு அரசு இல்லை
சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ். அதை இதுவரை படிக்காதது வருத்தம் தருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் இருப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசத்தில்இ ராஜஸ்தானத்தில் நீதிமன்ற மொழியாக இந்தி மொழி இருக்க முடியுமென்றால் தமிழ்நாட்டில் ஏன் தமிழ் மொழி இருக்க முடியாது?

No comments:

Post a Comment