Wednesday, February 28, 2018

போகாதே என் தலைவா போகாதே!

போகாதே என் தலைவா போகாதே!
பொல்லாத சொர்ப்பனம்நானும் கண்டேன்!!
பிரதேசசபை நகரசபைகள் மட்டுமல்ல
மாநகரசபையும் கைவிட்டுப்போக கண்டேன்
அடுத்த எலெக்சனில் நீங்களும்கூட
தோல்வியடைந்துவிடுவீர என கண்டேன்
கூட இருந்து குழி பறிக்கும் சுமந்திரனால்
நீ தோல்வியடைய கனவு கண்டேன்
மகிந்தர் வெருட்டினவர் என்று அறிக்கை விட்டதால்
இனி மகிந்தருடன் சேர்ந்து தண்ணியடிக்க முடியாது
எலெக்சன் தோல்வியால் நல்லாட்சி அரசு ஆட்டம் காணுது
எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகப் போகுது
சொகுசு பங்களா , சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு
எல்லாமே பறிபோகப்போகுது தலைவா!
இந்தியாவில் இருந்த மகனை ஆசையுடன் கூட்டி வந்தாய்
அவனுக்கும் ஒரு பதவி கொடுத்து அழகு பார்த்தாய்
இப்ப எல்லாத்துக்கும் ஆப்பு விழுந்திடுமோ என்று
பயமாய் இருக்குது தலைவா!
போகாதே என் தலைவா போகாதே
பொல்லாத சொர்ப்பனம் நானுங் கண்டேன்.

No comments:

Post a Comment