Wednesday, February 28, 2018

டீ விற்றவர் கையில் நாட்டை ஒப்படைத்தால்

•டீ விற்றவர் கையில் நாட்டை ஒப்படைத்தால்
அவர் ஒருபுறம் நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்
மறுபுறம் அறிவியல் கருத்துகளை மாற்றுகிறார்.
கடவுளே மனிதனைப் படைத்தான் என உலகம் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் அதை மறுத்து குரங்கில் இருந்து பரிழணாம வளர்ச்சி பெற்றவனே மனிதன் என்று நிரூபித்தவர் டார்வின்.
இன்று டார்வின் பிறந்த தினமாகும். சினிமா நடிகர்களின் பிறந்தநாளுக்கு கட்அவுட் கட்டி பால் அபிசேகம் செய்யும் இன்றைய இளைஞர்களுக்கு டார்வின் சாதனை புரியுமா தெரியவில்லை.
பதினேழாயிரம் பறவைகள், விலங்குகள், பூச்சகளை வைத்து பல வருடங்களாக செய்து பெற்ற ஆராய்ச்சி முடிவுகளை சுமார் பத்து ஆண்டுகளாக வெளியே கூறாமல் இருந்தார் டார்வின்.
ஏனெனில் உலகம் உருண்டை என்று கண்டு பிடித்து கூறியவரை கடவுளுக்கு விரோதமான கருத்துகளை கூறுவதாக சிறையில் அடைத்து கொன்றிருந்தது கிருத்தவ மதம்
எனவே மதநம்பிக்கைகளுக்கு விரோதமான தனது கண்டுபிடிப்பிற்கும் இத்தகைய தண்டனையே கிடைக்கும் என்று அஞ்சி பல வருடங்களாக மௌனமாக இருந்தார்.
இறுதியில் அவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியே கூறியிருந்தபோதும் கடவுள் பற்றியும் மதம் பற்றியும் கருத்து கூறாமல் தவிர்த்தே வந்தார்.
இவரது சாதனைக்கு மதிப்பளித்து காரல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தை இவருக்கு சமர்ப்பிக்க முன்வந்துபோதும் அவர் மத நிறுவனங்களுக்கு அஞ்சி அதை பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் வரலாற்றில் டார்வின் போல் மதங்களுக்கு மரண அடி கொடுத்தவர் வேறு யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அதனால்தான் டார்வினின் தத்துவம் இருக்கும்வரை தமது மதவாத கருத்துக்களை பரப்ப முடியாது என்று மதவாதிகள் கருதுகின்றனர்.
அண்மையில் பிரதமர் மோடி கட்சியின் கல்வி அமைச்சர் டார்வின் பரிணாம தத்துவம் தவறு என்றும் அது கல்வி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
டார்வின் தத்துவம் என்பது பல்வேறு ஆராய்ச்சிகளினூடாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானம் ஆகும்.
அது தவறு என்பதை இன்னொரு விஞ்ஞான ஆராய்ச்சிகளினூடாக நிரூபிக்கப்பட வேண்டுமேயொழிய மதவாத அடிப்படை நம்பிக்கைகளினூடாக அல்ல.
அறிவியல் வளர்ச்சிக்கு தடை போடுகிற சமூகம் ஒருபோதும் வளர முடியாது. இதை இந்திய மக்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment