Wednesday, February 28, 2018

ரவுப் ஹக்கீமால் முடியுமென்றால் ஏன் சம்பந்தர் அய்யாவால் முடியாது?

•ரவுப் ஹக்கீமால் முடியுமென்றால்
ஏன் சம்பந்தர் அய்யாவால் முடியாது?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நல்லாட்சி அரசின் ஒரு அங்கமாக இருக்கிறார்.
ஆனால் அம்பாறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என்று அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சராக இருந்தாலும் தன் முஸ்லிம் மக்களுக்காக அவர் உரத்து குரல் கொடுத்துள்ளார்.
ஆனால் சம்பந்தர் அய்யா இதுவரை தமிழ் மக்களுக்காக உரத்து குரல் கொடுக்கவில்லை.
காணாமல்போனவர்களின் உறவுகள் 365 நாட்களுக்கு மேலாக வீதி ஓரத்தில் உட்கார்ந்து போராடி வருகிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது நிலத்தை கோரி குடும்பமாக போராடி வருகிறார்கள்.
தனக்கு பதவி, பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய சம்பந்தர் அய்யாவால் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்க கொடுக்க முடியவில்லை.
வேலை கேட்டால் தீர்வு வருகிறது என்று கூறுவதும், தீர்வு எங்கேயென்றால் அடுத்த பொங்கலுக்கு வரும் என்பதுமாக ஏமாற்றுவதே சம்பந்தர் அய்யாவின் அரசியல் பணியாக இருக்கிறது.
திருகோணமலையில் வில்லூன்றி கரை வலைப்பாட்டின் மீது போடப்பட்டிருந்த தடை நேற்று முதல் ஜே.வி.பி கட்சியினரின் முயற்சியினால் நீக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதியினால் போராடி இந்த தடையை நீக்க முடியுமென்றால் சம்பந்தர் அய்யாவினால் ஏன் முடியாது?
இத்தனைக்கும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் அய்யாவே. அவரது தொகுதியில் உள்ள மக்கள் குறைபாட்டை ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் வந்து தீர்த்து வைக்கிறார்.
என்னே கேவலம் இது? இனியாவது தனக்கு வோட்டு போட்ட தமிழ் மக்களுக்காக சம்பந்தர் அய்யா குரல் கொடுப்பாரா?

No comments:

Post a Comment