Wednesday, February 28, 2018

ஜீயரின் போராட்டம்

•ஜீயரின் போராட்டம்
ஆண்டாளுக்கான போராட்டம் அல்ல!
அது தமிழ்மக்களை தொடர்ந்தும் அடிமையாக வைத்திருப்பதற்கான போராட்டம்!!
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜீயர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை இப்படி உண்ணாவிரதம் இருந்துவிட்டு ஒரு நாளில் முடித்துவிட்டார்.
இப்போது மீண்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். இம்முறை எத்தனை நாள் தாக்குபிடிக்கிறார் என்று தெரியவில்லை.
தனக்கும் கல் எறிய தெரியும். சோடா போத்தில் வீச தெரியும் என்று ரவுடி ரேஞ்சில் அறிக்கைவிட்டார் இந்த ஜீயர்.
வைரமுத்து மீது எந்த தவறும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறிய பின்பும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த ஜீயர் அடம் பிடிக்கிறார்.
காவிரி நீரை தர கர்நாடக அரசு மறுக்கிறது. அது குறித்து இந்த ஜீயர் எந்த போராட்டமும் செய்வதில்லை.
தமிழக மக்களின் எந்தவொரு பிரச்சனைக்காகவும் இதுவரை எந்தவொரு போராட்டமும் செய்யாத இந்த ஜீயர் ஆண்டாளுக்காக போராடுவதாக கூறவது பொய்.
தமிழகத்தில் தொடர்ந்தும் பார்ப்பணிய ஆதிக்கம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே இவர் போராடுகிறார்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனை அடிமைப்படுத்த இவர் முயற்சிப்பதை தமிழக அரசு அனுமதிப்பது மட்டுமல்ல பாதுகாப்பும் கொடுக்கிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது அந்த மாநில மக்களுக்கு எதிராக இப்படி செய்ய முடியுமா?
ஆனால் இனி இவர்களின் சூழச்;சிகள் பலிக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழன் இன உணர்வுகொள்ள ஆரம்பித்துவிட்டான்.

No comments:

Post a Comment