Wednesday, February 28, 2018

சிலர் சொல்வதும் சொல்லாமல் தவிர்ப்பதும்!

சிலர் சொல்வதும்
சொல்லாமல் தவிர்ப்பதும்!
மகிந்த ராஜபக்ச 2015ல் பெற்ற வாக்குகள் 5768090. இப்பொழுது 2018ல் பெற்ற வாக்குகள் 4941952.
அதாவது 2015ல் 47.58 % வாக்குகளும் 2018ல் 44.65% வாக்குகளும் அவர் பெற்றிருக்கிறார்.
அவர் 826138 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். அதாவது 2.93 % வாக்குகள் குறைந்துள்ளது.
புள்ளிவிபரங்கள் இந்தளவு தெளிவாக இருந்தும் மகிந்த ராஜபக்ச அமோக ஆதரவைப் பெற்றிருப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று மட்டுமன்றி இனவாதமும் அதிகரித்துவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை அவர்கள் இன்னொரு விடயத்தையும் சொல்லாமல் தவிர்த்து வருகின்றனர். அல்லது சொல்லாமல் மறைக்க முயல்கின்றனர்.
அதாவது ஜே.வி.பி யினர் 150000 வாக்குகள் அதிகமாக இம்முறை பெற்றுள்ளனர்.
தமிழ்மக்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டும் என்று கூறிவரும் ஜேவிபி யினர் அதிகமான வாக்குகளை பெற்றிருப்பதை இந்த சிலர் சொல்லாமல் மறைக்க முயலுகின்றனர்.
அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அதிகரிப்பதற்கும் லண்டனில் தமிழ்மக்கள் நடத்திய போராட்டமே காரணம் என்றும் அந்த சிலர் கூறுகின்றனர்.
ஆனால் “தமிழ்மக்களை கழுத்து அறுப்பேன் என்று காட்டியது தேசப்பற்று இல்லை என்றும் அது பச்சை இனவாதம்” என்றும் சிங்கள மக்களில் பலர் கூறியுள்ளனர் என்பதை இந்த சிலர் சொல்வதில்லை.
உண்மைகளை மறைத்து பொய்களையே இந்த சிலர் சொல்லி வருகின்றனர்.

No comments:

Post a Comment