Wednesday, February 28, 2018

திருமுருகன் காந்தி அவர்களே!

திருமுருகன் காந்தி அவர்களே!
கருணாநிதி கூட்டிய “டெசோ” மாநாட்டை விட பெரிய மாநாட்டை உங்களால் கூட்டிவிட முடியுமா?
வைகோ ஈழத் தமிழருக்காக இதுவரை பேசியதைவிட அதிகமாக உங்களால் பேசிவிட முடியுமா?
டாக்டர் ராமதாஸ் ஈழத் தமிழருக்காக விட்ட அறிக்கையைவிட அதிகமான அறிக்கையை உங்களால் விடமுடியுமா?
வீரமணி, கௌத்தூர் மணி, கோவை இராமகிருஸ்ணன் அளவு நீண்ட காலம் ஈழ ஆதரவு உங்களால் வழங்கியிருக்க முடியுமா?
இல்லை. ஒருபோதும் இல்லை என்பதே உங்கள் பதிலாக இருக்க முடியும். அப்படியென்றால் உங்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில்,
கருணாநிதியால், வைகோவால், ராமதாசினால், வீரமணி போன்றவர்களால் ஏன் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாமற் போனது என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மாநாடு நடத்துவது, அறிக்கை விடுவது, கூட்டம் போடுவது போன்றவற்றால் ஈழத் தமிழருக்கு உதவ முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“ஒரு அடிமை தனது அடிமைதத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்” என்ற தோழர் தமிழரசன் கூற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக விடுதலைக்காக போராடுவதே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு செய்யும் உதவி என்பதை புரிந்துகொண்டு அதனை செயற்படுத்த முன்வர வேண்டும்.
தேர்தல் பாதை மூலம் தமிழின விடுதலையைப் பெற முடியாது என்பதை கூறி ஆயுதம் ஏந்திய மக்கள் போராட்டத்தை முன்வைக்க வேண்டும்.
தமிழக மக்கள் முன்னெடுக்கும் விடுதலைப் போராட்டம் ஈழ விடுதலையை மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களுக்கும் விடுதலையை பெற்று தரப் போகின்றது என்பதை அறிவிக்க வேண்டும்.
குறிப்பு-
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் துறந்த 16 பேரின் படங்களை மேடையில் வைத்திருந்தீர்கள். அவர்களின் தியாகத்தை மதிக்கிறோம். ஆனால் அதில் தோழர் தமிழரசன், மாறன், லெனின் போன்றவர்களின் படங்கள் வைக்கப்படாதது வருத்தம் தருகிறது.
1985ல் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி மருதையாற்று பாலத்தில் குண்டுவைத்தவர் தோழர் தமிழரசன்
1988ல் இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு எதிராக கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து மரணமடைந்தவர் தோழர் மாறன்.
1992ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின்னர் ஈழத் தமிழீழத்திற்கு ஆதரவாக குண்டு வைத்தவர் லெனின்.
இவர்களுடைய தியாகம் மற்றவர்களின் தியாகத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று கருதுகிறீர்கள் திருமுருகன் காந்தி அவர்களே?

No comments:

Post a Comment