Wednesday, February 28, 2018

இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

•இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
இன்று வெள்ளிக்கிழமை. வேலைநாள் மட்டுமல்ல பாடசாலை நாளும்கூட
நேரமோ மதியம். ஆனால் வானத்திலோ வெளிச்சம் இல்லை.
கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இருந்தும் சுமார் ஜயாயிரம் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
சிறுவர் முதல் பெரியோர்வரை பெண்கள் உட்பட மக்கள் திரண்டு வந்துள்ளனர்.
புலிக்கொடி பிடித்தமையினால் இது மக்கள் போராட்டம் இல்லை என்றும் அதனால் அரசாங்கம் பிரச்சனையை தீர்க்காது என்றும் சிலர் கூற முற்படுகின்றனர்.
அப்படியானவர்களிடம் கேட்க விரும்புவது என்னவெனில், காணாமல்போனவர்களின் உறவுகள் 350 நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
அந்த உறவுகள் புலிக்கொடி ஏந்தவில்லை. பிரபாகரன் படம் வைத்திருக்கவில்லை. ஆனாலும் இலங்கை அரசு ஏன் அவர்களின் பிரச்சனையை தீர்க்கவில்லை?
கேப்பாபிலவு மக்கள் வீதியில் உட்கார்ந்து பலநாட்களாக போராடுகிறார்கள். அவர்கள் புலிக்கொடி ஏந்தவில்லை. பிரபாகரன் படம் வைத்திருக்கவில்லை. அவர்கள் பிரச்சனையை ஏன் இலங்கை அரசு தீர்க்கவில்லை.
அரசியல்கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதம் இருந்து போராடினார்கள். அவர்கள் புலிக்கொடி ஏந்தவில்லை. பிரபாகரன் படம் வைத்திருக்கவில்லை. அவர்களை ஏன்அரசு இன்னும் விடுதலை செய்யவில்லை?
யுத்தம் முடிந்து 9 வருடமாகிவிட்டது. இலங்கை அரசு தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முன்வரவில்லை.
இந்த நியாயத்தை கேட்கவேண்டியவர்கள் மாறாக புலிக்கொடி விடயத்தை கூற முற்படுவது இலங்கை அரசைக் காப்பாற்ற முயலும் விடயமே.
தயவு செய்து மக்களுடன் சேர்ந்து போராடுங்கள். முடியவில்லை என்றால் பேசாமல் ஒதுங்குங்கள். ஆனால் காட்டிக் கொடுக்கும் வேலையை செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment