Wednesday, February 28, 2018

என்ன மிஸ்டர் சுமந்திரன்! லண்டனில் எல்லோரையும் விலைக்கு வாங்கியாச்சு எண்டீர்கள்.

பிரதமர் ரணில்- என்ன மிஸ்டர் சுமந்திரன்! லண்டனில் எல்லோரையும் விலைக்கு வாங்கியாச்சு எண்டீர்கள். அப்புறம் எப்படி ஜயாயிரம் பேர் சேர்ந்து போராடினாங்கள் என்று நியூஸ் வருது?
சுமந்திரன்- அதுதான் சேர் எனக்கும் குழப்பமாய் இருக்கு. தலைவர்களை விலைக்கு வாங்கினாலும் மக்களை விலைக்கு வாங்கமுடியாது போல் இருக்கு.
பிரதமர் ரணில்- இதை இப்படியே சும்மா விடக்கூடாது. அப்புறம் இதைப்பார்த்து பிரான்ஸ்காரங்கள் போராடுவாங்கள். அப்புறம் கனடாகாரங்கள் போராடுவாங்கள். அப்புறம் அப்படியே இங்கை நாட்டில் உள்ளவங்களும் ஆரம்பித்துவிடுவாங்கள். தெரியும்தானே?
சுமந்திரன்- ஆமாம் ஆமாம் சேர். முளையிலேயே இது கிள்ளியெறியப்பட வேண்டும். ஆனால் எப்படி செய்வது என்றுதான் தெரியவில்லை?
பிரதமர் ரணில்- ஏன் என்ன குழப்பம்? வழக்கம்போல் பணம், பதவி, கொலிடே பக்கேஜ் சலுகைகளைக்காட்ட வேண்டியதுதானே?
சுமந்திரன்- அதில தமிழ்சொலிடாடிற்றிகாரங்கள் இருக்கிறாங்கள். அவங்களை எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியவில்லை சேர்? என்னுடைய ஆட்கள் அவர்கள்மீது “புலி முத்திரை” குத்தியும் பலனில்லாமல் இருக்கு.
பிரதமர் ரணில்- ஓ! அப்படியா? கவலைப்பட வேண்டாம். உங்கட ஆட்களை இன்னும் நல்லாய் வேலை செய்ய சொல்லுங்க. தகுந்த சன்மானம் கிடைக்கும் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
சுமந்திரன்- இறைச்சித்துண்டு வீசும் எஜமானுக்கு எப்போதும் நன்றியுள்ள நாய்க்குட்டிகளாக நாங்கள் வாலாட்டிக்கொண்டே இருப்போம் சேர்.
குறிப்பு- யாவும் கற்பனை அல்ல

No comments:

Post a Comment