Wednesday, February 28, 2018

தம்பி கஜன்! வாங்களேன் பழகிப் பார்ப்பம்

தம்பி கஜன்!
வாங்களேன் பழகிப் பார்ப்பம்
வேணுமென்டால் மேயர் பதவியை நீங்கள் எடுங்களேன்
ஆனால் எனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை
எப்படியாவது காப்பாற்றி தாருங்கள்
உமக்கு தெரியும்தானே?
பதவி இல்லாமல் என்னால் இருக்கேலாது என்று
அதுவும் என்னைவிட என்ரை மகனுக்கு
சொகுசு பங்களாவும் ஏசி காரும் இல்லாமல் இருக்க முடியாதாம்.
அதனால் எலெக்சனில் பேசினதை எல்லாம் மறந்தவிட்டு
வாருங்கள் இருவரும் கைகோர்ப்போம்.
தமிழ் மக்களுக்காக ஒன்றாக சேர்கிறோம் என்று
நன்றாகவே அறிக்கைவிடுவோம்!
வாருங்கள் கஜன் வாருங்கள்
உங்களை வரவேற்க
வாசற்கதவை பார்த்தபடியே
காத்து இருக்கும்
உமது சம்பந்தர் அய்யா
குறிப்பு- நீர் என்னை அய்யா என்று அழைப்பதில்லை என்று தெரியும். இருந்தும் பழக்கதோசத்தில் போட்டுவிட்டேன்.

No comments:

Post a Comment