Wednesday, February 28, 2018

என்னே கொடுமை இது?

•என்னே கொடுமை இது?
இந்தியாவில் கல்வி அறிவு மிக்க மாநிலம் கேரளம் என்றார்கள்
இந்தியாவில் கம்யுனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மாநிலம் கேரளா என்றார்கள்
இந்தியாவில் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இல்லாத மாநிலம் கேரளா என்றார்கள்.
மொத்தத்தில் கேரளம் ஒரு கடவுளின் தேசம் என்றார்களே!
இன்று அந்த தேசத்தில் உணவை திருடியதாக ஒரு மனநோயாளியை அடித்துக் கொன்றதாக செய்தி வந்துள்ளதே?
வட இந்தியாவிலோ அல்லது பாஜக ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு செய்தி வந்திருந்தால் அதை புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் கேரளாவில் எப்படி இது நடந்தது?
உணவை திருடியதற்காக ஒரு மனநோயாளியை அடித்து கொல்லும் அளவிற்கு எப்படி அவர்களுக்கு மனசு வந்தது?
அதைவிட அந்த அப்பாவி இளைஞனுடன் “செல்பி” வேற எடுத்து பகிர்ந்துள்ளார்கள் சில இளைஞர்கள்.
பசிக்காக உணவை திருடுவது கொலை செய்யப்படும் அளவிற்கு குற்றமா?
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல முழு மனித சமுதாயத்திற்கே ஒரு அவமானகரமான செயல் இல்லையா?
லலித் மோடி திருடியது 6000 கோடி ரூபா
நீரவ் மோடி திருடியது 12000 கோடி ரூபா
விஜய் மல்லையா திருடியது 9000 கோடி ரூபா
கொல்லப்பட்ட இளைஞன் திருடிய உணவின் பெறுமதி வெறும் 200 ரூபா மட்டுமே.
200 ரூபா திருடிய இளைஞனை அடித்துக் கொன்றவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியவர்களை ஏன் எதுவுமே செய்யவில்லை?
சீ… வெட்கம்!

No comments:

Post a Comment