Tuesday, August 15, 2023

போராட்டம் இன்பமயமானது

“போராட்டம் இன்பமயமானது” என்று கடந்த ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். உடனே ஒரு நபர் “ போராட்டம் உயிர் இழப்பை தருகிறது, சிறை வாழ்வை தருகிறது, சித்திரவதைகளை அனுபவிக்க வைக்கிறது. அதெப்படி இன்பமயமானதாக இருக்க முடியும்?” எனக் கேட்டார். போராட்டம் மகிழ்சிகரமானது என்று நான் கூறவில்லை. இப்படி கூறியவர் காரல் மார்க்கஸ். மார்க்ஸ் நாடுவிட்டு பல நாடுகள் சென்று அகதி வாழ்க்கை வாழ்ந்தவர். பெற்ற குழந்தைக்கு பால்மா வாங்கவும் அவரிடம் பணம் இருக்கவில்லை. அந்த குழந்தை இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை. அந்தளவு வறுமையை அவர் அனுபவித்தார். இன்று உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட நூல் அவரது மூலதனமே. இன்று உலகில் அதி சிறந்த சிந்தனையாளராக போற்றப்படும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் வெறும் 34 பேர் மட்மே. அந்த மார்க்ஸ்தான் "போராட்டம் மகிழ்சிகரமானது" என்றார். உண்மைதான். போராட்டம் வெற்றியை தர தவறலாம். அதாவது தாமதமாகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. பிரசவம் மரண வலியைத் தருகிறது. ஆனாலும் அதை அனுபவித்த எந்த தாயும் பிரசவத்தை வெறுப்பதில்லை.. ஏனெனில் பிரசவம் பிறப்பு என்னும் மகிழ்சிகரமான அற்புதக் குழந்தையை தருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் தானாக கிடைத்தவை அல்ல. யாவும் போராடியே பெறப்பட்டது. படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஒடுகின்றவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் தமிழ் இனம் ஓடுகின்றது. அது போராடுகின்றது. எனவே அது நிச்சயம் உலகை வெல்லும்

No comments:

Post a Comment