Wednesday, May 16, 2018

•விடுதலைக்கு விலங்கு – ராபர்ட் பயஸ்

•விடுதலைக்கு விலங்கு – ராபர்ட் பயஸ்
“ எனக்கென்று உங்களிடம்
பகிர்ந்து கொள்ள
ஒரு கனவு இருக்கிறது.
நானும் ஒருநாள் என்
தாய் நிலத்திற்கு திரும்புவேன்.
வெண்மணல் செறிந்த என் கடற்கரையில் காலாற நடப்பேன்
நிலாப்பொழுதுகளில் நான் பால்யத்தில்
விளையாடிய என் வீதிகளில் நடந்து திரிவேன்.
உடலெங்கும் என் தாய் நிலத்தின் மண்ணை
குழைத்துப் பூசிக்கொண்டு
வெற்றுடம்போடு என் நிலத்தில் கிடப்பேன்.
அந்த கனவு மெயப்படும்பொழுதில்தான்
நான் முதன்முதலாக சிரிப்பேன்”
என்று தனது விடுதலைக்கு விலங்கு” என்னும் நூலில் ராபர்ட் பயஸ் குறிப்பிடுகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழரான ராபர்ட்பயஸ் 27 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரின் இந்நூல் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.
வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் நன்கு எழுதப்பட்டுள்ளது.
ராபர்ட்பயஸ் தனது பிறந்து 17 நாளேயான குழந்தை இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதால் அதற்கு பழி வாங்கவே ராஜீவ்காந்தியை கொல்ல உதவி புரிந்தார் என்று சிபிஜ கூறியுள்ளது.
சரி, அப்படியென்றால் பயஸ் தண்டிக்கப்பட்டுள்ளார். பயஸ் குழந்தையைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை? அதனை யார் வழங்குவது?

No comments:

Post a Comment