Wednesday, May 16, 2018

போஸ்ட் ஆபீசுக்கு போக வழி தெரியாத ஒரு பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான்.

போஸ்ட் ஆபீசுக்கு போக வழி தெரியாத ஒரு பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான்.
நன்றி கூறிய பாதிரியார் சிறுவனிடம் சொன்னார் “ உனக்கு சொர்க்கம் போகும் வழியைக் காட்டுகிறேன். என் திருச்சபைக்கு வா” என்றார்.
அதற்கு அந்த சிறுவன் கூறினான் “பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு வழி தெரியாத நீங்களா எனக்கு சொர்க்கத்திற்கு வழி காட்டப் போகிறீர்கள்?”
இதைத்தான் “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம்” என்று பழமொழியல் கூறுவது.
கிட்டத்தட்ட இப்படியொரு கதைதான் எங்களுக்கு அரசியல் கைதிகள் விடயத்தில் நடக்கிறது.
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள்விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி கோரியுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் ஜனாதிபதி தாமதம் செய்கிறார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
ஆனால் ஜனாதிபதியோ அரசியல்கைதிகள் எவரும் சிறையில் இல்லை என்று கூறியுள்ளார்.
சிறையில் இருப்பவர்கள் அரசியல்கைதிதான் என்பதைக்கூட எமது தலைவர்கள் இதுவரை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
தான் ஜனாதிபதியுடன் பேசியதாகவும் அவர் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வதாக தனக்கு வாக்குறுதியளித்ததாகவும் சுமந்திரன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என்று ஜனாதிபதி கூறுவதை பார்க்கும்போது இவர்கள் யாருமே இதுவரையில் ஜனாதிபதியுடன் இது பற்றி பேசவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரோரணையின் போதுகூட இது பற்றி அரசுடன் பேச ஒரு நல்ல வாய்ப்பு எமது தலைவர்களுக்கு கிடைத்திருந்தது.
ஆனால் எமது தலைவர்கள் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் தமக்கு பதவி பட்டம் பங்களா சொகுசு வாகனம் போன்றவற்றை கேட்டுப் பெறுவதில் அக்கறை காட்டுகிறார்களேயொழிய தமிழ் மக்களுக்காக எதையும் கேட்பதில்லை.
ஜேவிபிகூட அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி மேதினத்தில் கோஷம் போட காட்டும் அக்கறையைவிட ஜனாதிபதியுடன் இதுகுறித்து நெரடியாக பேசினால் தமிழ் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
முன்னாள் புலனாய்வு பிரதி தலைவரும் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
கண்டி தலாதா மாளிகை மல்வத்த பீட தலைமை தேரரும் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யும்படி .கோரியுள்ளார்.
இவ்வாறு மத தலைவர்கள் , மக்கள் என பலரும் கோரியிருந்தும் நல்லாட்சி அரசு இன்னும் அனந்த சுதாகரனை விடுதலை செய்யவில்லை.
அப்புறம் என்ன மயிருக்கு இந்த அரசை சம்பந்தனும் சுமந்திரனும் காப்பாற்றி வருகின்றார்கள்?

No comments:

Post a Comment