Saturday, May 26, 2018

•தூத்துக்குடி துயரக்குடி அல்ல

•தூத்துக்குடி துயரக்குடி அல்ல
அது தமிழகத்தின் எழுச்சிக்குடி!
தூத்துக்குடியை துயரக்குடியாக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது எழுச்சிக்குடியாக மாறுகிறது.
தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் மாணவர் படை களத்தில் குதித்துள்ளது.
இந்திய நாட்டில் மான் சுட்டால் வழக்கு . மயில் சுட்டால் வழக்கு. ஆனால் மனிதனை சுட்டால் மட்டும் எதுவும் இல்லை. அதுவும் செத்தது தமிழன் என்றால் கேட்க யாருமே இல்லை.
இறந்தவர்களின் எண்ணிக்கை 20க்கும் அதிகம் என்கிறார்கள். தடை உத்தரவு போட்டு மின்சாரம் மற்றும் இணைய சேவையை நிறுத்திவிட்டு மக்களை தாக்குகின்றனர்
.
ஆனாலும் மக்கள் ஸ்டெர்லைட் கம்பனியை மூடும்வரை தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை அளிக்கிறது.
ஆனாலும் தமிழக அரசு ஸ்டெர்லைட் கம்பனியை மூட மறுக்கிறது. இந்த காப்ரேட் கம்பனிக்காக தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கிறது.
மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க மக்கள் தயங்க மாட்டார்கள்.
இதோ யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் தமிழகத்தில் இறந்த தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ஏனெனில் இழப்பின் வலியை இவர்கள் அனுபவித்தவர்கள். இறப்பின் கொடுமையை உணர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மக்களின் போராட்டம் தமிழக மக்களை மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

No comments:

Post a Comment