Saturday, May 26, 2018

•சம்பந்தர் ஜயாவும் மாவை சேனாதிராசாவும்

•சம்பந்தர் ஜயாவும் மாவை சேனாதிராசாவும்
இறந்த தூத்துக்குடி தமிழர்களுக்காக உரையாடல்!
மாவை சேனாதிராசா- ஜயா! தமிழக தமிழர் 10 பேர் செத்திட்டாங்களாம். நீங்கள் ஒரு கண்டன அறிக்கை விட்டால் நல்லாய் இருக்கும்.
சம்பந்தர் ஜயா- என்ன கருமத்தை கேட்கிறீங்க. நான் ஈழத் தமிழன் செத்தாலே அறிக்கை விடுகிறது இல்லை. அப்படியிருக்க தமிழக தமிழனுக்கு எப்படி அறிக்கை விடமுடியும்?
மாவை சேனாதிராசா- என்ன இருந்தாலும் முள்ளிவாய்க்கால் நேரம் 16 தமிழக இளைஞர் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தனர். இப்ப நாங்கள் அவர்களுக்கு ஒரு கண்டன அறிக்கைகூட விடவில்லை என்றால் நல்லாய் இருக்காது அல்லவா?
சம்பந்தர் ஜயா- விடலாம்தான். சுட்டது சீனா நாட்டு அரசு என்றால் இந் நேரம் நான் பாராளுமன்றத்தில் முழங்கியிருப்பேன். ஆனால் சுட்டது இந்திய அரசாய் அல்லவா இருக்கிறது. இந்திய அரசை எதிர்த்து எப்படி என்னால் அறிக்கை விட முடியும்?
மாவை சேனாதிராசா- இந்திய அரசுக்கு எதிராக கண்டன அறிக்கை விடாவிட்டாலும் பரவாயில்லை. செத்தவர்களுக்கு ஒரு அஞ்சலி அறிக்கையாவது விடலாம் அல்லவா ஜயா!
சம்பந்தர் ஜயா- அஞ்சலி அறிக்கை விடலாம்தான். ஆனால் அது அஞ்சலி அறிக்கை என்று விளங்காமல் இந்திய தூதர் கோபித்தால் என்ன செய்வது?
மாவை சேனாதிராசா- அப்ப என்னதான் செய்யிறது ஜயா? லண்டனில கனடாவில எல்லாம் எங்கட ஆட்கள் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யினம். நாங்கள் ஒரு அறிக்கைகூட விடவில்லை என்றால் அப்புறம் பேஸ்புக்கில் காறித் துப்புவாங்கள் ஜயா.
சம்பந்தர் ஜயா- நீர் சொல்லுறதை பார்த்தால் அறிக்கை விட வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றுது. ஆனால் அப்பறம் வாரக் கடைசியிலை தூதுவரை நினைத்தால்தான் குழப்பமாய் இருக்குது. தண்ணியடிக்கும்போது அந்தாள் கேட்டால் எப்படி சமாளிப்பது? அதுமட்டுமன்றி நெஞ்சில செய்த ஆப்பிரேசனுக்கு செக்கப்பிற்காக அடுத்த மாதம் டில்லி போகவேண்டி இருக்குது. அதுதான் யோசிக்கிறன்.
மாவை சேனாதிராசா- அப்ப சுமந்திரனை ஒரு அறிக்கைவிடச் சொல்லி கேட்கிறீங்களா ஜயா?
சம்பந்தர் ஜயா- சுமந்திரனை கேட்டனான். “வடமாகாண முதலமைச்சர் இன்னும் அறிக்கை விடவில்லை. அவர் விட்டால் நாங்களும் விடலாம்” என்று அவர் கூறுகிறார்.
மாவை சேனாதிராசா- முதலமைச்சர் எற்கனவே முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நல்ல பெயர் எடுத்துவிட்டார். இப்ப இதற்கும் அறிக்கை விட்டார் என்றால் இன்னும் அவருக்கு பெயர் கூடிவிடும். அப்புறம் மாகாணசபை தேர்தலில் எங்களால வெல்ல முடியாமல் போய்விடும் ஜயா.
சம்பந்தர் ஜயா- அதைப்பற்றியெல்லாம் நாங்க கவலைப்பட வேண்டியதில்லை. அதை அந்த நேரத்தில இந்தியா பார்த்துக்கொள்ளும்.
மாவை சேனாதிராசா- சரி ஜயா. இந்த முறையாவது ஏமாற்றாமல் மாகாணசபை முதல்வர் பதவி எனக்கு தருவீர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறன்.
( யாவும் கற்பனை அல்ல)

No comments:

Post a Comment