Wednesday, May 16, 2018

•சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?

•சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?
ரெலோ இயக்க தலைவர் சிறீயண்ணா முன்வைத்த தமிழீழம் கைவிடப்பட்டுவிட்டது
ரெலோ இயக்க தலைவர் சிறீயண்ணா முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
ரேலோ இயக்க தலைவர் சிறீயண்ணா நம்பிய இந்திய அரசு அவரையும் கைவிட்டது, ஈழத் தமிழர்களையும் கைவிட்டுவிட்டது.
இந்நிலையில் இப்போது எதற்காக ரெலோ இயக்கம் சிறீயண்ணாவை நினைவு கூர்கிறது?
சிறீயண்ணா தலைமையிலான ரெலோ இயக்கம் தாஸ் உட்பட பல உட்கட்சி போராளிகளை கொன்றதற்காக நினைவு கூருகின்றார்களா?
ஊர்வலமாக சென்ற வடமராட்சி மக்களை கோப்பாயில் வைத்து சுட்டார்களே அதற்காக நினைவு கூருகின்றார்களா?
ஊர்வலமாக வந்த மண்டான் மக்களை மூத்தவினாயகர் கோவிலடியில் வைத்து அடித்து விரட்டினார்களே அதற்காக நினைவு கூர்கிறார்களா?
பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டுக்கொன்றமைக்காக நினைவு கூருகின்றார்களா?
சுட்டுக் கொன்ற அதே தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து இப்போது எலெக்சன் கேட்கிறார்களே. அதற்காக நினைவு கூர்கிறார்களா?
பல சிறிய இயக்கங்களை தடை செய்து அவர்களின் ஆயுதங்களை பறித்தமைக்காக நினைவு கூருகின்றார்களா?
வன்னியில் NLFT இயக்கதில் இருந்த இரண்டு போராளிகளை பிடித்து சென்று அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டி அதில் அவர்களை கொன்று புதைத்தார்களே. அதற்காக நினைவு கூர்கின்றார்களா?
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் அமைப்பிடமிருந்து ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகளை மிரட்டி பறித்தமைக்காக நினைவு கூருகின்றார்களா?
சயிக்கிளுக்காகவும் சில்லறை பணத்திற்காகவும் பல அப்பாவி முஸ்லிம் மக்களை கிழக்கு மாகாணத்தில் கொன்றார்களே. அதற்காக நினைவு கூர்கிறார்களா?
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் வரும் என்று 1983ல் கூறினார்கள். அதன் பின்பு 35 பொங்கல் வந்துபோய் விட்டது. ஆனால் இவர்கள் கூறிய தமிழீழம் மட்டும் இன்னும் வரவில்லை.
இவர்களை நம்பி சென்ற பல போராளிகள் இனறும்; தெருவில் நிற்கின்றனர்.
ஆனால் ரெலொ தலைவர் செல்வம் அடைகலநாதன் இந்தியாவில் இருக்கும் மகளின் பெயரைப் பதிவு செய்து இலங்கையில் சம்பளம் எடுக்கிறாராம்.
சிறீயண்ணாவை நினைவு கூருவோர் ஏன் ரேலோ போராளிகளுக்கு உதவ முன்வரக்கூடாது?

No comments:

Post a Comment