Saturday, May 26, 2018

செத்தது மாடாக இருந்திருந்தால்

செத்தது மாடாக இருந்திருந்தால்
அம்புலன்சும் வந்திருக்கும்
மோடி ஆரசும் ஓடி வந்திருக்கும்.
ஆனால் செத்தது தமிழனாயிற்றே
மோடி அரசில் தமிழன் உயிர்
மாட்டை விடக் கேவலமாயிற்றே!
செத்தவன் பார்ப்பாணாயிருந்தால்
உச்சநீதிமன்றம் தானாகவே தலையிட்டிருக்கும்
தேசிய மனிதவுரிமைக் கமிஷன் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கும்
ஆனால் செத்தது தமிழனாயிற்றே
தமிழன் ஈழத்தில் செத்தாலும் சரி
இந்தியாவில் செத்தாலும் சரி
கேட்பதற்கு நாதியற்ற இனமாகவே இருக்கிறான்.
100 நாட்கள் அறவழியில் போராடிய மக்களுக்கு
வன்முறையால் பதில் அளித்துள்ளது இந்திய அரசு
காஸ்மீரில்கூட சினைப்பர் பிரிவு இல்லை
ஆனால் தூத்துக்குடியில் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை
திட்டமிட்டு சினைப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது அரசு.
அதுவும் சிவில் உடையில் வந்து கொன்று குவித்துள்ளனர்.
நடந்தது கலவரம் என்றால் வானில் சுட்டிருப்பார்கள்
நடந்தது வன்முறை என்றால் காலில் சுட்டிருப்பார்கள்
நடந்தது திட்டமிட்ட படுகொலை. அதனால்தான் சினைப்பர் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள்.
சுட்டுவிட்டு யூஸ் கொடுத்தால் அது இலங்கை அரசு
சுட்டுவிட்டு காசு கொடுத்தால் அது இந்திய அரசு
தமிழா!
இன்னும் எத்தனை நாளைக்கு இதனை சகித்துக்கொண்டிருப்பது?

No comments:

Post a Comment