Saturday, May 26, 2018

மீண்டும் துப்பாக்கிச் சூடு

மீண்டும் துப்பாக்கிச் சூடு
மீண்டும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
தொடர்ந்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது
மோடி அரசு தன் சொந்த மக்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை.
அது காப்ரேட் கம்பனிகளின் நலனையே கவனத்தில் கொள்கிறது.
மோடி அரசின் எடுபிடி அரசாகவே எடப்பாடி அரசு செயற்படுகின்றது.
இவற்றின் ஏவல் நாயாகவே பொலிசார் மக்களை கொல்கின்றனர்.
இத்தனை எதிர்ப்பு வந்தபிறகும்கூட ஸ்டெர்லைட் கம்பனியை அரசு மூடவில்லை.
மாறாக போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை தேடிப்பிடித்து கொல்கின்றனர்.
இங்கு செத்தவன் மட்டுமல்ல சுட்டவனும் தமிழன் தான். சுட உத்தரவிட்டவனும் தமிழன்தான்.
ஒரு காப்ரேட் கம்பனிக்காக தன் சொந்த இனத்தையே சுட்டுக் கொல்கின்றது தமிழக அரசு.
ஆனாலும் ஒருவழியை மூடினால் ஒன்பது வழியை திறப்போம் என்று தமிழ் மக்கள் காட்டியுள்ளனர்.
தூத்துத்குடியில் மட்டும் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இப்போது தமிழகம் எங்கும் மட்டுமல்ல தமிழர் வாழும் உலகெங்கும் பரவியுள்ளது.
லண்டனில் ஸ்டெர்லைட் கம்பனி முதலாளி வீட்டின் முன்பே தமிழ் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்று லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்திற்கு முன்னால் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
உலகெங்கும்வாழும் ஈழத் தமிழர்கள் தமது தொப்புள்கொடி உறவுகளான தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
10 பேரை சுட்டுக்கொன்றால் போராட்டம் அடங்கிவிடும் என்று இந்திய அரசு நினைத்தது.
ஆனால் எத்தனைபேரை சுட்டுக்கொன்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஓயமாட்டோம் என மக்கள் காட்டி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் கேட்டான் “ நாங்கள் கம்பனிக்கு எதிராகத்தானே போராடினோம். எங்களை ஏன் அரசு சுடுகின்றது?”
வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி இறுதியாக உச்சரித்த வார்த்தை “ஸ்டெர்லைட் கம்பனியை மூடுங்கள்”
ஆனால் இந்திய அரசு தொடர்ந்தும் மக்களை சுட்டுக்கொன்று வருகிறது. செய்திகள் வெளியுலகிற்கு தெரியாவண்ணம் இண்டர்நெட் சேவையையும் தடை செய்துள்ளது.
ஆனாலும் மக்கள் நம்பிக்கையுடன் போராடி வருகின்றனர். அவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
ஏனெனில் மக்கள் சக்தியே மகத்தான சகதி.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது.

No comments:

Post a Comment