Wednesday, May 16, 2018

தம்பி மாவை! மே தினம் எல்லாம் எப்படி போய்ச்சுது?

சம்பந்தர்- தம்பி மாவை! மே தினம் எல்லாம் எப்படி போய்ச்சுது? தம்பி கஜன் கூட்டத்திற்குத்தான் ஆட்கள் கூட என்டு கதைக்கினம். உண்மையா?
மாவை சேனாதிராசா - ஓமோம் ஜயா! சுமந்திரனும் ஜேவிபி யோட எல்லாம் கூட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் இப்ப மக்கள் எங்களை நம்பியினம் இல்லை.
சம்பந்தர்- உதுக்குத்தான் நான் அப்பவே சொன்னனான். தம்பி கஜன் கேட்கிற சீட்டைக் குடுத்து எங்களோடை வைத்திருக்க வேண்டும் எண்டு. நீங்கள் யாரும் என் சொல்லைக் கேட்கவில்லை.
மாவை சேனாதிராசா - விக்கியரும் கஜனும் சேரப்போகினமாம் என்டு கதை வருகுது. அப்படி நடந்தால் மாகாணசபை எங்களுக்கு கிடைக்கிறது கஸ்டம் ஜயா!
சம்பந்தர்- இப்ப அந்த கருமத்திற்கு என்னை என்ன செய்யச் சொல்லுறியள்?
மாவை சேனாதிராசா - இந்த வருட இறுதிக்குள் தீர்வு வரும். இல்லையேல் போராட்டம் செய்வோம் என்று மக்கள் நம்பும்படியாய் இனி அடிக்கடி கூற வேண்டும். முக்கியமாய் குறைந்தது இரண்டு பேரையாவது சிறையில் இருந்து விடுதலை செய்விக்க வேண்டும் ஜயா!
சம்பந்தர்- என்ரை பதவியே போகப் போகுது போல. நான் என்ர பதவியைக் காப்பாத்திறதா அல்லது சிறையில் உள்ள இளைஞர்களை விடுதலை செய்யச் சொல்லிக் கேட்பதா?
மாவை சேனாதிராசா - ஜே.வி.பி கூட சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யச் சொல்லிக் கேட்குது. நாங்கள் கேட்காவிட்டால் அப்புறம் எப்படி போய் மக்களிடம் வோட்டு கேட்பது ஜயா?
சம்பந்தர்- சிறையில் உள்ளவர்களை அரசு விடுதலை செய்தால் நாங்கள் சொல்லித்தான் அரசு விடுதலை செய்தது என்று ஒரு அறிக்கை விட்டு சமாளிக்கலாம். ஆனால் என்ர பதவிக்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ளும்படி ஜே.வி.பி தம்பிகளிடம் பேசிப் பாருங்களேன்.
மாவை சேனாதிராசா - சரி ஜயா! நான் பேசிப் பார்க்கிறேன். அப்புறம், பல முன்னாள் போராளிகள் மரணமடைவது குறித்து நாங்கள் எதுவும் அக்கறை கொள்ளவில்லை என்று பேஸ்புக்கில தாறுமாறாய் எழுதுறாங்கள் ஜயா!
சம்பந்தர்- அப்படியா? சரி அந்த செத்த தம்பியின் போட்டோவை வாங்கி வையுங்கள். வருகிற மாகாணசபைத் தேர்தலில் போஸ்டர் அடித்து வோட்டு கேட்போம்.
மாவை சேனாதிராசா - ஜயா! இப்ப காலம் மாறுது. முன்னை மாதிரி இல்லை. இப்ப மக்களுக்கு எல்லாம் விளங்குது. இனி நாங்க முன்னை மாதிரி ஏமாத்த முடியாது.
சம்பந்தர்- ஓ! அப்படியா? அப்ப நான் சாகும் வரையில் பதவியில் இருக்க முடியாதா?

No comments:

Post a Comment