Saturday, May 26, 2018

தமிழ் மக்கள் மீண்டும் எழுவதற்கு

•தமிழ் மக்கள் மீண்டும் எழுவதற்கு
பெருமையளிக்கும் மாணவர் பங்களிப்புகள்!
முள்ளிவாய்க்காலில் அயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் இத்தனை விரைவாக ஒற்றுமையுடன் திரும்பி எழவார்கள் என்பதை எதிர்பார்காதவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
இதுவரை முள்ளிவாய்க்கால் அவலத்தை அழுது ஒப்பாரி வைக்கும் நிகழ்வாக நடத்தியவர்கள் மத்தியில், அதனை மீண்டும் எழுவதற்கான நிகழ்வாக நடத்தியவர்கள் மாணவர்களே.
தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெருமையளிக்கும் மாணவர்களின் இந்த பங்களிப்பை சிலர் எரிச்சலுடன் விமர்சிகக் முயலுகின்றனர்.
மாணவர்கள் கறுப்பு சட்டையுடன் வரிசையாக நிற்கின்றனர். விறைப்பாக நிற்கின்றனர் என்றெல்லாம் படம் போட்டு விமர்சிக்கின்றனர்.
இதெல்லாம் ஒரு விமர்சனமா? நாலு பேர் தாங்கிப் பிடிக்க எப்போதும் தளர்ந்து நிற்கும் வயதான சம்பந்தர் அய்யாவைப் பார்த்தவர்களுக்கு மாணவர்கள் விரைப்பாக நிற்பது எரிச்சலைக் கொடுக்கிறதா?
உண்மையில் இவர்களது கவலை எல்லாம் மாணவர்கள் தங்களை ஒதுக்கிவிட்டு நினைவு தினத்தை கொண்டாடி விட்டார்களே என்று அல்ல.
மாறாக, இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று மாணவர்கள் போராட்ட தலைமையை அடைந்து விடுவார்களோ என்றுதான் அச்சப்படுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்செல்வனுக்கு பின்னால் பைல்கட்டுகளை தூக்கிக்கொண்டு அலைந்தது போல் மீண்டும் பதவிக்காக இந்த மாணவர் பின்னால் அலைய வேண்டு வந்துவிடுமோ என்றுதான் இவர்கள் அஞ்சுகின்றனர்.
இதே மாணவர்கள் இவர்களை ஆதரித்தபோது தவறானவர்களாக தெரியவில்லை. ஆனால் இவர்களை ஒதுக்கிவிட்டு இதே மாணவர்கள் நினைவு நிகழ்வை செய்யும்போது “ரவுடிகள்”, “கஞ்சா அடிக்கிறார்கள்”, “பிரதேசவாதம் பேசுகின்றனர்”, “விறைப்பாக நிற்கின்றனர்;” என்றெல்லாம் குறை கூறுகின்றனர்.
மாணவர்கள் எம்மவர்கள். நாம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
எனவே அவர்கள் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதுபோல் இருக்க வேண்டும். மாறாக புலி தன் இரையைக் கவ்வுவது போல் இருக்கக்கூடாது.

No comments:

Post a Comment