Wednesday, May 16, 2018

•வடமாகாணசபையும் அதன் மோசடிகளும்!

•வடமாகாணசபையும் அதன் மோசடிகளும்!
வடமாகாணசபையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சர்வேஸ்வரன் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பதவியேற்று ஒரு சில மாதங்களுக்குள்ளேயே சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் வியப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைகளில் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளை பாடசாலை நிர்வாகம் நடத்தக்கூடாது என இக் கல்விஅமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலை சிற்றுண்டிசாலைகளை நடத்தி அதன்மூலம் வரும் பணத்தில் இருந்து பாடசாலை செலவுகளை செய்து வந்த பாடசாலைகள் இதனால் பாதிப்படைந்தன.
குறிப்பாக நெல்லியடி மத்தியமாகா வித்தியாலயம் இச் சிற்றுண்டிசாலை பணத்தில் இருந்தே கல்லூரி விளையாட்டுப் போட்டிகளைக்கூட நடத்தி வந்தது.
வடமாகாண கல்வி அமைச்சரின் உத்தரவையடுத்து நெல்லியடி மத்திய மாகாவித்தியாலயத்தின் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் பொறுப்பு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுகிர்தன் ரயில்வே கடவைகள் அமைக்காவிட்டால் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்துவேன் என்று மாகாணசபையில் சவடால் பேசியவர்.
மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனுக்கு எப்படி இந்த பொறுப்பு வழங்கப்பட்டது என தெரியவில்லை? ஆனால் சுகிர்த்தனின் சகோதரர் ஒருவர் அப் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றுகிறார்.
ஆசிரியராக கடமையாற்றும் சுகிர்த்தனின் சகோதரரே சிற்றுண்டிச்சாலையைக் கவனித்து வருகிறார்.
அவர் ஓரு ஆசிரியர். ஆனால் அவர் அசிரியர் தொழில் செய்வதில்லை. காலை முதல் மாலை வரை சிற்றுண்டிச்சாலையையே கவனித்து வருகிறார்.
சுகிர்தனின் சகோதரர் ஆசிரியர் வேலையை செய்யாமல் இருப்பதை பாடசாலை அதிபரால் கண்டிக்க முடியவில்லை.
சுகிர்தன் மாகாணசபை உறுப்பினராக இருப்பதால் அவருடைய தம்பி மீது நடவடிக்கை எடுக்க பாடசாலை அதிபர் அஞ்சுகிறார்.
வடமாகாணசபையின் மோசடிகளுக்கு நெல்லியடி மத்தியமாகாவித்தியாலயம் ஒரு சின்ன உதாரணமாகும்.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகின்றது. இந்த வடமாகாணசபை இருக்கும்வரை யாழ் மாவட்டம் மீண்டும் கல்வியில் சிறந்து இடத்திற்கு வரப்போவதில்லை.

No comments:

Post a Comment