Wednesday, May 16, 2018

அன்புள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு!

அன்புள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு!
இன்று என் மகன் அருகில் வந்தான்
நீண்ட காலத்தின் பின் என்னை கட்டி அணைத்தான்
ஆசையாக பல வடிவங்களில் போட்டோ எடுத்தான்
ஏன் என்று கேட்டதற்கு
பேஸ்புக்கில் அன்னையர் தின பதிவு போட என்றான்
தம்பி மார்க்கு!
ஒரு வருடத்தில்
பத்து பதினைந்து அன்னையர்தினம் வைக்கக்கூடாதா?
அப்படியாவது என் மகன் என்னை கட்டியணைக்க மாட்டானா?
இப்படிக்கு,
முதியோர் இல்லத்தில் விடப்பட்ட
மகன் பாசத்திற்காக ஏங்கும்
ஒரு அம்மா

No comments:

Post a Comment