Sunday, November 20, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 44 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 44 நாட்கள் மட்டுமே!
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி தீர்வு கிடைப்பதற்கு இன்னும் 44 நாட்கள் மட்டுமே இருக்கிறது.
இதோ இடம்பெயர்ந்து வாழும் மக்களின் அவலத்தை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.
கழிப்பறை வசதிகூட இல்லாமல் 26 வருடங்கள் அகதியாக வாழும் அவர்களுக்கு நிவாரணத்தைக்கூட அரசு நிறுத்திவிட்டது.
இவர்களது வாக்கைப் பெற்று எம்.பி பதவி பெற்றவர்கள் தமக்கு எட்டுக் கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்கள்.
அதில் ஒரு சொகுசு வாகனத்தை விற்றாலே இந்த மக்களின் கழிப்பறைப் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.
அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் 2 மாதமாக முகாமில் குவிந்திருக்கும் குப்பையைக்கூட அகற்றவில்லை.
இதைக்கூட மாகாணசபையால் கவனிக்க முடியவில்லை என்றால் அது என்னதான் கிழிக்கிறது?
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் வந்து பார்வையிட்டார். வாக்குறுதியளித்தார். ஆனாலும் எதுவுமே இதுவரை நடைபெறவில்லை.
இப்படி ஒரு நிலையில் தமிழ் மக்கள் இருப்பது சம்பந்தர் அய்யாவுக்கு நினைவில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
இந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யாவிடின் போராட்டம் வெடிக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய மாவை சேனாதிராசா ஏனோ இன்னும் வெடிக்கவில்லை.
இவ்வாறான நிலைமை தொடருமேயானால் தமிழகத்தில் இருந்து இத் தலைவர்களின் குடும்பங்களை வெளியேற்றுமாறு தமிழக மக்களால் போராட்டம் நடத்தப்படும்.
அதுமட்டுமல்ல இவர்கள் இறக்குமதி செய்த சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த பணம் இந்த அகதி மக்களுக்கு வழங்கப்படும்.
இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment