Sunday, November 20, 2016

•ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?

•ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா?
இல்லை
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா?
இல்லை
ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம்சாட்டப்பட்டாரா?
இல்லை
ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா?
இல்லை
அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்?
கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன?
ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார்
புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை?
எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள்.
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் பரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்.
இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபொதும் அனுமதிக்காது.
முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அண்மையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.
உண்மைதான். தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற முயற்சி செய்யவில்லை.
ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்ஈ இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் அதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம். அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம்.
குறிப்பு- ரவிராஜ் கொல்லப்ட்ட தினம் இன்று. சரியாக பத்து வருடங்களுக்கு இதே நாளில் அவர் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment