Sunday, November 20, 2016

•ஜெர்மனியின் டாயிஷே வங்கி திவாலாகிறதா? அதனால் உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றுமா?

•ஜெர்மனியின் டாயிஷே வங்கி திவாலாகிறதா?
அதனால் உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றுமா?
ஜெர்மனியின் மிகப் பெரிய வங்கியான டாயிஷே வங்கி 1870 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் மொத்த சொத்து மதிப்பு 1.7 ட்ரில்லியன் யுரோக்கள்.
சுமார் 70 க்கு மேற்பட்ட நாடுகளில் இந்த வங்கி இயங்குகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பணி புரிகின்றனர்.
2007ம் ஆண்டு இந்த வங்கியின் ஒரு பங்கின் மதிப்பு 160 டாலராக இருந்தது. கடந்த வருடம் அதன் பங்கு மதிப்பு 29 டாலராக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 14 டாலராக சரிந்துள்ளது.
இந் நிலையில் கடன் பத்திரங்களை கைமாறியதில் செய்த முறைகேடுகளிற்காக டாயிஷே வங்கி 14 பில்லியன் டாலர் அபராதம் கட்டுமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி சென்ற 2015-ம் ஆண்டு வங்கிகளுக்கு இடையிலான கடன் கொடுக்கும் வட்டி விகித நிர்ணய மோசடியில் டாயிஷே வங்கியின் பங்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, 2.5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் டாயிஷே வங்கி அமெரிக்காவின் இந்த 16.5 பில்லியன் டாலர் அபாரத தொகையை கட்ட நிர்ப்பந்திக்கப்படுமாயின் அது திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை.
டாயிஷே வங்கி திவாலானால் நெருக்கடியில் இருக்கும் மேலும் 11 பெரிய வங்கிகள் திவாலாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர் பொருளாதார நிபுனர்கள்.
டாயிஷே வங்கி திவாலானால் அதனால் அமெரிக்காவும் நிச்சயம் பாதிப்படையப் போகிறது. இருந்தும் அமெரிக்கா எதற்காக இவ்வளவு பெரிய அபராத தொகையை விதித்தது?
அமெரிக்காவின் அப்பிள் நிறுவனத்திற்கு ஜரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்தமைக்கு போட்டியாக அமெரிக்கா டாயிஷே வங்கிக்கு அபாரதம் விதித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
அமெரிக்கா எற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ளது. எனவே இவ்வாறு அபராதங்களை விதித்து அதன்மூலம் தன் நெருக்கடிகளை குறைக்க மயல்கிறது என வேறு சிலர் கூறுகின்றனர்.
இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்கா ஜரோப்பா எல்லாமே நெருக்கடியில் இருக்கின்றன என்பதும் அவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட போகின்றன என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும்.
முதலாளித்துவம் நெருக்கடி தோன்றும் போது எல்லாம் புதிய கண்டு பிடிப்புகள் மூலம் தன்னை தக்கவைத்துக்கொண்டு வந்திருக்கிறது. எனவே இம்முறையும் அது தன்னை நெருக்கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், 1931ல் ஜரோப்பாவில் இருந்த ஒரு முக்கிய வங்கியின் தோல்வியை அடுத்தே இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது.
எனவே 2008 ல் ஏற்பட்டதைப் போன்று 5 மடங்கு பெரிய பொருளாதார நெருக்கடி வரப் போவதாக எதிர்வு கூறப்பட்டிருக்கும் நிலையில் அது பெரிய யுத்தத்தை கொண்டு வந்துவிடுமோ என பயப்படாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் லண்டன் மற்றும் கனடா நாடுகளில் இருக்கும் நம்மட ஆட்களுக்கு டாயிஷே வங்கி கவுண்டால் என்ன? இல்லை பாக்கிளேஸ் வங்கி கவுண்டால் என்ன?
அவர்களின் கவலை எல்லாம் தமது மகளின் செவ்வாய் தோசம் நீங்க கேரளா சோதிடரைப் பிடிப்பதா அல்லது ஆந்திரா சோதிடரைப் பிடிப்பதா என்பதில்தான் உள்ளது.

No comments:

Post a Comment