Sunday, November 20, 2016

•ஜனாதிபதி மைத்திரி உண்மையில் எளிமையானவரா? அல்லது அவரை எளிமையானவராக காட்ட முயல்கிறார்களா?

•ஜனாதிபதி மைத்திரி உண்மையில் எளிமையானவரா?
அல்லது அவரை எளிமையானவராக காட்ட முயல்கிறார்களா?
ஜனாதிபதி மைத்திரி வீட்டில் இருந்து சோறு கொண்டு வந்து பாராளுமன்றத்தில் சாப்பிட்டாராம்.
ஜந்து நட்சத்திர உணவுக்கு இணையான பாராளுமன்ற உணவை உண்ணாமல் வீட்டுச் சோற்றை சாப்பிட்டதால் அவர் எளிமையானவராம்.
அவர் தனது நண்பனின் உடலை தோளில் சுமந்து சென்றாராம். இலங்கை வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் இப்படி தோளில் சுமந்தது இல்லை என புகழ் பாடுகிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் ஜனாதிபதி தன் கையால் தன் குண்டி கழுவினார் என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் எழுதுவார்களோ என அச்சமாக இருக்கிறது.
இப்படித்தான் இந்திய வரலாற்றில் ஒரு எளிமையானவர் இருந்தார். அவரை மகாத்மா காந்தி என்றார்கள். அந்த எளிமையானவர் “ஒரு எளிமையானவர்” என்று காட்டுவதற்காக இந்திய அரசாங்கம் பல லட்சங்களை செலவு செய்ததாம்.
அந்த அரைப் பக்கி எளிமையானவர் எப்போதும் முதலாளி பிர்லா மாளிகையில்தான் தங்குவாராம். அவர் எளிமையாக ஆட்டுப் பால் குடிப்பதற்காக குஜராத்தில் இருந்து ஆடு விமானத்தில் தருவிக்கப்படுமாம்.
அதேபோலத்தான் நம்முடைய எளிமையான ஜனாதிபதியும். இந்த எளிமையானவருக்கு எப்படி பொல்லநறுவையில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான அரிசி ஆலைகள் சொந்தமாக வந்தன?
லொறி கிளீனராக வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு இன்று எப்படி நூற்றுக்கணக்கான லாறிகளுக்கு உரிமையாளரானார்?
இந்த எளிமையானவரின் குடும்பம் எப்படி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளை சொந்தமாக கொண்டிருக்கிறது?
இந்த எளிமையானவரின் பிள்ளைகள் எப்படி கொழுமபு; நகரின் இரவு விடுதிகளில் குத்தாட்டம் போடுகின்றனர்?
சரி இதெல்லாம் அவரது தனிப்பட்ட விடயங்கள் என்றாலும் இவரது ஆட்சியின் கீழ் மக்கள் வறுமையில் வாழ முடியாமல் தற்கொலை செய்யும்போது இவர் சோறு சாப்பிடுவதில் என்ன எளிமை இருக்கு? அல்லது என்ன பெருமைப்பட இருக்கு?
மகிந்த கும்பலை மக்கள் தோற்கடித்தபோதும் இதுவரை அவர்கள் மீது இவருடைய அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
மத்தியவங்கி ஆளுநரும் பிரதமர் ரணிலும் ஊழல் செய்துள்ளனர் என்று கோப் அறிக்கை சுட்டிக்காட்டிய பின்பும் ஏன் அவர்கள் மீது இந்த எளிமையானவர் நடவடிக்கை எடுக்கவில்லை?
விமல் வீரவம்ச வீட்டிலேயே ஒரு இளைஞன் கொல்லப்பட்டிருக்கிறான். ஆனால் விமல்வீரவம்ச மீது ஏன் இந்த எளிமையானவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
மக்களின் கவனத்தை திருப்புவதற்காகவே மைத்திரியை எளிமையானவராக காட்ட முயல்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை நம்பப்போவதில்லை.
போங்கடா போங்க! நாங்க கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத நடிப்பையே பார்த்தவங்க. எங்கிட்டேயா உங்க நடிப்பை காட்டுறீங்க?

No comments:

Post a Comment