Sunday, November 20, 2016

•பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம மோடியின் பாரத நாடு!

•பாருக்குள்ளே நல்ல நாடு
நம்ம மோடியின் பாரத நாடு!
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே ரூபாய் நோட்டை தான் செல்லாதாக்கியதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
கறுப்பு பணத்தை யார் ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கிறார்கள்? பெரும்பாலும் எல்லாம் சுவிஸ் பாங்கில் அல்லவா வைத்திருக்கிறார்கள்.
சுவிஸ் பாங்கில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் பெயரிலும் 15லட்சம் ரூபா வைப்புச் செய்வேன் என்றுதானே தேர்தலின்போது மோடி கூறினார்.
அப்படியென்றால் இப்போது எதற்காக திடீரென்று ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கினார் மோடி ?
இதனால் காவிரி பிரச்சனையை தமிழக மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது உண்மைதான்.
இதனால் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை மனிதவுரிமைவாதிகள் மறந்துவிட்டனர் என்பது உண்மைதான்.
இதனால் என்கவுன்டரில் சிமி அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள் என்பது உண்மைதான்.
இதனால் காஸ்மீரில் பில்லட் குண்டுகளால் சுட்டதைக்கூட அனைவரும் மறந்துவிட்டனர் என்பதும் உண்மைதான்.
ஆனால் இது எல்லாவற்றையும் விட இதனால் தன் பெயர் கெட்டுவிடும் என்பது மோடிக்கு தெரியாதா?
இதுவரை 25க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து விட்டார்கள். சாதாரண மக்கள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள். இது மோடியின் பொருளாதார ஆலோசகர்களுக்கு தெரியாதா?
காப்ரேட் கம்பனி முதலாளிகளுக்கு எதிராக இந்தியாவில் இன்னும் தாக்கும் பிடிக்கும் கிராமிய பொருளாதாரத்தை உடைப்பதற்காகவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா?
விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் இனி வங்கி மூலமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதும் இனி பணமாக 4000 ரூபா மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாடுகளும் பலத்த சந்தேகத்தை உருவாக்குகின்றன.
எனவே இனி அனைவரும் பணத்தை வங்கியில் போடுவது மட்டுமன்றி அதற்காக அரசுக்கு வரியும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகின்றது.
வங்கியில் சேரும் பணத்தை தனக்கு விரும்பிய முதலாளிகளுக்கு கடனாக கொடுக்கவும் சிறிது காலத்தின் பின் வராக் கடன் என்று அதனை தள்ளுபடி செய்யவும் அரசு முயல்கிறது.
மக்கள் எல்லாம் 500 ருபாய்க்காக அலைகிறார்கள். ஆனால் சுரங்க முதலாளி ரெட்டி தன் மகளுக்கு 500 கோடி ருபா செலவில் திருமணம் செய்கிறார்.
அதுமட்டுமல்ல விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்கின்ற போதும் அவர்களது கடனை தள்ளுபடி செய்ய அரசு மறுக்கிறது.
கல்விக்கடனை வசூலிக்க அடியாட்களை அனுப்பி மாணவர்களை சாக வைக்கும் இந்த வங்கிகள் முதலாளிகளின் 7000கோடி ரூபா கடனை தள்ளுபடி செய்துள்ளன.
இத்தனைக்கும் பிறகும்கூட மோடி அரசு ஏழைகளின் அரசு என்று நம்புவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment