Sunday, November 20, 2016

•இவர்கள் என்ன தங்களுக்கு சொகுசு வாகனமா கேட்டார்கள்?

•இவர்கள் என்ன தங்களுக்கு சொகுசு வாகனமா கேட்டார்கள்?
தமக்கு நிரந்தர நியமனம் கோரி கடந்த ஒன்பது நாட்களாக மாநகர சபை சுகாதாரஊழியர்களால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் இன்று மாநகரசபையினரால் தனியார் சுத்திகரிப்பு ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு யாழ் கொட்டடி மயானத்துக்கு முன்பாக தேங்கி நாற்றம் எடுக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் குறித்த பகுதிக்கு சென்று குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், கலகத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர்.
தமது தொழிலை நிரந்தரமாக்கும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என சுத்திகரிப்புத் தொழிலாளிகள் அறிவித்தனர்.
யாழ் கொட்டடிப் பகுதியில் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் குப்பை கொட்டப்படும் இடத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்களது வேலையை நிரந்தரமாக்கும்படி கோரியமைக்கு கலகம் அடக்கும் பொலிசாரை வைத்து விரட்டுவது என்ன நியாயம்?
உழைக்கும் மக்களை உதாசீனம் செய்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை என்பது இந்த வடமாகாணசபை அரசியல்வாதிகளுக்கு மறந்து போய்விட்டதா?
தங்களுக்கு சொகுசு வாகனம் இறக்கியவர்கள். தங்களுக்கு தாங்களே சம்பள அதிகரிப்பு செய்தவர்கள். அது போதாதென்று வைரமுத்துவை அழைத்து தங்களுக்கு கவிதை பாடி மகிழ்ந்தவர்கள் இந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது என்ன நியாயம்?
யாழ் மாநகர சபையே!
சுகாதார ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதே!
அவர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்று!
தமிழ் மக்களே!
சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை கட்டியெழுப்புவோம்!

No comments:

Post a Comment