Sunday, November 20, 2016

•தோழர் விசுவானந்த தேவனை நினைவு கூர்வோம்!

•தோழர் விசுவானந்த தேவனை நினைவு கூர்வோம்!
தோழர் விசு மாக்சிய லெனினிய மாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு போராளி.
அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தார்.
அவர் இலங்கை இந்திய புரட்சிகர சக்திகள் மத்தியில் ஒரு ஜக்கியத்தை கட்ட முயற்சிகள் மேற்கொண்டார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடி பலர் உயிர் நீத்துள்ளனர். அவர்களில் ஒருவரான தோழர் விசு அவர்களை நினைவு கூர்ந்து நூல் ஒன்று வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.
அவர் இறந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் வெளிவந்துள்ள இந் நூல் அவர் முன்னெடுத்த அரசியலை தெளிவாக முன்வைக்க தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில்,
•மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலை அவர் ஏன் பின்பற்றினார் என்பதையோ அல்லது அவர் முன்னெடுத்த அந்த தத்துவ வழிகாட்டல் இன்றும் ஏன் அவசியம் என்பது குறித்தோ இந் நூல் விபரிக்க தவறிவிட்டது.
•பாராளுமன்ற பாதையை பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப்பாதையை விசு மேற்கொண்டிருந்தார். அவர் ஆயுதப் போராட்ட பாதையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையோ அந்த பாதையானது அன்று மட்டுமல்ல இன்றும்கூட அவசியமானது என்பது பற்றியோ விளக்குவதற்கு இந் நூல் தவறிவிட்டது.
•அவர் ஏன் தமிழீழத்தை முன்வைத்தார்? அப்புறம் அவர் ஏன் தமிழீழத்தை கைவிட்டார்? என்பது குறித்த காரணங்களை அவர் பற்றி கருத்துகள் தெரிவித்துள்ள எவரும் விளக்காதது ஏன் என்று பரியவில்லை. ( அவர் இறுதியாக எம்மை சந்தித்தபோது தான் தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக கூறினார்)
•இந்திய அரசின் பயிற்சிகளை மற்ற அமைப்புகள் பெறுவதை விமர்சித்த தோழர் விசு பின்னர் ஈபிஆர்எல்எவ் ஊடாக அதே இந்திய பயிற்சியை பெற முனைந்ததாக குற்றச்சாட்டு உண்டு. அது பற்றி எந்த விளக்கமும் இந் நூலில இல்லை.
•மற்ற அமைப்புகள் வங்கிகளில் கொள்ளையடித்தபோது அதனைத் தவறு என்று விமர்சித்த தோழர் விசு பின்னர் அவரது அமைப்பு அட்டநாசனல் வங்கியில் கொள்ளையடித்தது ஏன் என்பது குறித்தும் எதுவும் இந் நூல் தெரிவிக்கவில்லை.
•எல்லாவற்றுக்கும் மேலாக, சகோதரப் படுகொலைகளை எப்போதும் கண்டித்து வந்த தோழர் விசு, தமது அமைப்பு இரண்டாக உடைந்தபோது சகோதரப் படுகொலைகளுக்கு பரஸ்பரம் முயற்சிகள் மேற்;கொண்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அது குறித்தும் எதுவும் இந் நூல் பேசப்படவில்லை.
தன் வாழ்நாள் முழுவதும் புரட்சிக்காக உழைத்து உயிர்நீத்த தோழர் விசுவை நினைவு கூர்வது தொடர்ந்தும் புரட்சியை முன்னெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும்.
ஆனால் தோழர் விசு குறித்த இந் நூல் அதற்கு உதவ தவறிவிட்டது என்பதே இங்கு கவலையுடன் சுட்டிக்காடட வேண்டியதாகும்.

No comments:

Post a Comment