Saturday, December 21, 2019

அவுஸ்ரேலிய வேகப்பந்து வீரர் பாட் கம்மின்ஸ் 15 கோடி ரூபாவுக்கு

செய்தி - அவுஸ்ரேலிய வேகப்பந்து வீரர் பாட் கம்மின்ஸ் 15 கோடி ரூபாவுக்கு 2020 ஜபிஎல் இல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலும் ஆட்டம் ஆரம்பம். ஆனால் இது அரசியல் ஐபிஎல். இதுவரை வெளி வந்த செய்திகள்.
• முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது
• ராஜிதவுக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு
• மங்கள சமரவீர வெளி நாட்டுக்கு தப்பி ஓட்டம்
• சம்பந்தர் இந்தியாவுக்கு பறந்தார்.
• சரத்பொன்சேகாவை கைது செய்யுமாறு கோரிக்கை.
அடுத்து எந்த விக்கட் விழும் என்று தெரியவில்லை. அல்லது அடுத்து யாரை கோத்தா அணியினர் விழுத்தப் போகின்றார்கள் என்றும் தெரியவில்லை.
பொதுத் தேர்தல் முடிந்த பின்பே பழி வாங்கலைச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவரையும் பொறுக்க முடியாது என்று ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒருவேளை அச்சமூட்டி அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெல்வதற்கு முடிவு செய்துவிட்டார்களோ தெரியவில்லை.
ஆனால் என்ன இருந்தாலும் இருவர் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஒருவர் சஜித். அவர் சம்பிக்க கைது செய்யப்பட்டதும் உடனே சென்று பார்வையிட்டதுடன் அவர் விடுதலைக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
இன்னொருவர் எங்கட சுமந்திரன். அவர் வீசிய பந்தில் அவரது அணியைச் சேர்ந்த சஜித்தை அவுட்டாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ஆனாலும் கோத்தாவுக்கு அஞ்சாமல் கேள்விக்கணைகளை வீசியுள்ளார்.
பொறுப்புக்கூறலில் இருந்து கோத்தா தப்ப முடியாது என்றும் மார்சில் அதிசயம் நிகழும் என்றும் சவால் விட்டுள்ளார்.
பார்க்கலாம். இந்த முறையாவது தமிழ் மக்களுக்கு ஆதரவாக பந்து வீசுகின்றாரா என்று?
குறிப்பு - சிங்கள தலைவர்களே பயந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளை திரும்பி வருமாறு பொறுப்பில்லாமல் சுமந்திரன் அறிக்கை விடுகிறார்.

No comments:

Post a Comment