Saturday, December 21, 2019

• என்னடா இது?

• என்னடா இது?
“தமிழரசுக்கட்சி தனது 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது” என்று செய்தி போட்டுவிட்டு அதன்கீழ் “டெங்கு அபாயம்! தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை” என்று செய்தி போடுகிறார்கள்.
என்னங்கடா இது? தமிழரசுக்கட்சிதான் தமிழ் மக்களுக்கு டெங்கு அபாயம் என்று சொல்ல வருகிறீர்களா? ஊடவியலாளர்களின் இந்த குசும்புக்கு ஒரு அளவேயில்லையா?
நல்லவேளை, “சுமந்திரன் கிளிநொச்சி விஜயம்” என்று செய்தி போட்டுவிட்டு அதன்கீழ் “கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சல் அபாயம்” என்று செய்தி போடாமல் விட்டாங்களே. அந்தளவுக்கு பரவாயில்லை. ஆறுதல் கொள்வோம்.
சரி இப்ப விடயத்திற்கு வருவோம்.
தமிழில் “தமிழரசுக்கட்சி” என்று பெயர் வைத்தவர்கள் ஆங்கிலத்தில் பெடரல் கட்சி ( Federal Party) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது Federal Party என்றால் தமிழில் சமஷ்டிக் கட்சி என்றுதான் வரும்.
அதாவது இப்ப மட்டுமல்ல கட்சி ஆரம்பிக்கும்போதே இந்த தமிழரசுக்கட்சியினர் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பரவாயில்லை. கடந்த 70 வருடமாக இந்த தமிழரசுக்கட்சியினர் தமிழ் மக்களுக்கு என்ன சாதித்திருக்கிறார்கள்? தங்களுக்கு பதவியும் சலுகைகளும் பெற்றதைத் தவிர.
தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் தர முடியாது என்று ஜனாதிபதி கோத்தபாயா உறுதியாகவும் தெளிவாகவும் கூறிவிட்டார்.
ஆனால் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவோம் என்று கூறிவந்த இந்திய அரசு இது குறித்து எதுவும் கூறாமல் மௌனம் காக்கிறது.
இந்தியாவின் இந்த கள்ள மௌனம் எந்தவொரு சுய உணர்வுள்ள தமிழனுக்கும் சந்தேகத்தையல்லவா கொடுக்க வேண்டும்.
ஆனால் தலைவர் சம்பந்தர் ஐயா “இந்தியா குறித்து யாரும் சந்தேகிக்கூடாது” என்கிறார்.
இதன் அர்த்தம் என்ன?

No comments:

Post a Comment