Saturday, December 21, 2019

• ஊடக குசும்பு

• ஊடக குசும்பு
தமிழரசுக்கட்சியின் 70 வது ஆண்டு விழா குறித்து ஒரு பதிவு போட விரும்பி அதற்குரிய படத்தை அனுப்புமாறு வழக்கம்போல் ஒரு ஊடகவியலாளர் நண்பரிடம் கேட்டேன்.
அவர் கீழே உள்ள படத்தை அனுப்பியிருந்தார். படத்தைப் பார்த்ததும் மாறி அனுப்பி விட்டாரே என்று நினைத்து படம் அனுப்புமாறு மீண்டும் கேட்டேன்.
அதற்கு அவர் மீண்டும் இந்த படத்தை அனுப்பிவிட்டு கீழே ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அந்த குறிப்பு வருமாறு,
"வண்டியை எப்படியோ குரங்குகள் கைப்பற்றிவிட்டன
ஆனால் குரங்ககளால் வண்டியை செலுத்த முடியவில்லை
அதுபோல தமிழரசுக்கட்சி தலைமையை கைப்பற்றியவர்களால்
தமிழ் மக்களுக்குரிய தலைமைத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை."
இந்த குறிப்பைப் படித்த பின்பு அவர் சரியான படத்தைத்தான் அனுப்பியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.
கோத்தபாயா வந்ததும் ஊடகவியலாளர் பயந்து விடுவார்கள் என்று சிலர் கூறினார்கள்.
எனக்கென்னவோ கோத்தா வந்த பின்பு ஊடகவியலாளர்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டதாகவே தோன்றுகிறது.
இந்த நேரத்தில் கிட்லர் காலத்து பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஜெர்மனியில் ஒரு பூங்காவில் இரண்டு யூதர்கள் உட்கார்ந்திருந்தார்களாம். அதில் ஒருவர் பெருமூச்சு விட்டாராம். சிறிது நேரம் கழித்து மற்றவர் பெருமூச்சு விட்டாராம். உடனே கிட்லரின் உளவுப்படை பொலிஸ் அரசியல் பேசியதாக குற்றம்சாடட்டி அந்த இரு யூதர்களையும் கைது செய்து விட்டதாம்.
இது கிட்லர் காலத்து அடக்குமறையை சுட்டிக்காட்டும் பகிடிதான். அதேபோல் கோத்தாவின் அடக்குமுறையை காட்டுவதற்குரிய திறமை எமது ஊடகவியலாளார்களுக்கு உண்டு என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
குறிப்பு - நான் எழுத வந்த விடயத்தை இந்த படமே சிறப்பாக விளக்கி விட்டதால் நான் எழுதிய பதிவை பகிரவில்லை.

No comments:

Post a Comment