Saturday, December 21, 2019

•சம்பந்தர் ஐயாவின் முடிவு வரவேற்கப்பட வேண்டியதே!

•சம்பந்தர் ஐயாவின் முடிவு வரவேற்கப்பட வேண்டியதே!
எதிர் வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சம்பந்தர் ஐயா அறிவித்துள்ளார்.
சம்பந்தர் ஐயா ஒதுங்க வேண்டும் என்று கடந்த வாரம் நான் எழதிய போது லண்டனில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் எனக்கு விசர் என்று எழுதினார்.
இப்போது அந்த வழக்கறிஞர் என்ன கூறப்போகின்றார் என்று தெரியவில்லை. எனினும் சம்பந்தர் ஐயாவின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியதே.
ஐயா இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது.
அத்துடன் அப்புறம் போனஸ் சீட் மூலமும் பாராளுமன்றம் செல்ல முயற்சி செய்யக்கூடாது.
சம்பந்தர் ஐயா இரண்டு உண்மைகளை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
முதலாவது,
புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது என்று கூறியுள்ளார். இதன் மூலம் நடந்த இனப் படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்பதை சம்பந்தர் ஐயாவின் வாக்குமூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது,
புலிகளை அழித்த பின்பு தீர்வு தரப்படும் என இலங்கையும் இந்தியாவும் உறுதியளித்திருந்தன என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த இன அழிப்பு சம்பந்தர் ஐயாவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அவர் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது.
இப்போது ஜனாதிபதி கோத்தபாயா தீர்வு எதுவும் தரப்பட மாட்டாது என்று தெரிவித்து விட்டார். இது குறித்து இந்தியாவும் எந்த அக்கறையும் இன்றி இருக்கிறது.
எனவே சம்பந்தர் ஐயாவை இந்திய அரசும் இலங்கை அரசும் ஏமாற்றி விட்டன என்பது தெளிவாக தெரிகிறது.
தன் இறுதி காலகட்டத்தில் இலங்கை இந்திய அரசின் உண்மை முகங்களை தமிழ் மக்களுக்கு காட்டியமைக்காவது சம்பந்தர் ஐயாவுக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment