Monday, December 30, 2019

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப்போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வருவதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளிவாகக் காட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடிகள் எற்படும்போது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றார்கள். ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மிகப் பெரிய வங்கிகளே திவாலாகிக் கொண்டிருக்கின்றன.
இவ் முதலாளித்தவ நெருக்கடிக்கு மாக்சியமே சிறந்த தீர்வை முன்வைக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உலகில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளில் மார்க்சியத்தை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை என்பதும் உண்மையே.
முதலாளித்துவத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் வல்லரசு நாடான பிரிட்டனிலேயே முதலாளித்தவத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசு தினறுகிறது.
இனவாதம், மதவாதம் போன்றவற்றை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உலகெங்கும் உள்ள பிற்போக்கு அரசுகள் முயலுகின்றன. ஆனால் இதன் மூலம் அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

No comments:

Post a Comment