Saturday, December 21, 2019

•ஆட்டம் ஆரம்பம்!

•ஆட்டம் ஆரம்பம்!
இரண்டு செய்திகள்
ஒன்று - முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது
இரண்டு- சம்பந்தர் ஐயா மருத்துவ சிகிச்சைக்காக நாளை இந்தியா செல்கிறார்.
இரண்டு செய்திகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்
இரண்டு செய்திகளுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் உண்டு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே உண்டா? இல்லையா? என்பது செய்தியைப் படிப்பவர்களின் புரிந்துணர்வைப் பொறுத்தது
சரி நாங்கள் இப்ப ஒரு உரையாடலை பார்ப்போம்.
சுமந்திரன் - ஐயா! சம்பிக்கவை தூக்கிட்டாங்களாம். அடுத்து என்னை தூக்கிடுவாங்களோ என்று பயமாக இருக்கிறது.
சம்பந்தர் ஐயா- அதெப்படி? தாங்கள் எந்த பழிவாங்கலிலும் ஈடுபட மாட்டோம் என்று நேற்றுதானே நாமல் தம்பி பேசியிருக்கிறார்.
சுமந்திரன் - நான்தான் நீதிமன்றம் சென்று மகிந்த பிரதமராவதை தடுத்தேன் என்று அப்போ வீர வசனம் பேசிவிட்டேன். இப்ப அதை ஞாபகம் வைத்து பழி வாங்கிவிடுவார்களோ என பயமாக இருக்கிறது.
சம்பந்தர் ஐயா - ஜனாதிபதி அப்படி செய்வார் என்று தோன்றவில்லை. தன்ர பாதுகாப்பை குறைத்தவர் இதுவரை எமது பாதுகாப்பை குறைக்க வில்லையே. அதைவிட தனக்கு பங்களா தேவையில்லை என்றவர் என்னை பங்களாவை விட்டு எழுப்பவில்லையே. அவர் நல்லவராகத்தானே இருக்கிறார்.
சுமந்திரன்- அப்படியெல்லாம் நினைத்து விட்டிட முடியாது ஐயா. அவர் என்னை கைது செய்யாவிட்டாலும்கூட திடீரென்று என்ர சிங்கள பொலிஸ் பாதுகாப்பை நீக்கி விட்டால் என்ன செய்வது? அப்புறம் எங்கட பெம்பிளைகளிட்டை செருப்படி வாங்கிறiதை என்னால் நினைத்தக்கூட பார்க்க முடியவில்லை.
சம்பந்தர் ஐயா - சரி. சரி. நான் ஒருக்கா இந்திய தூதுவரிட்ட இதைப் பற்றிப் பேசிப் பார்க்கட்டுமா?
சுமந்திரன் - இது தூதுவர் மூலம் சரிக்கட்டுற விசயம் இல்லை ஐயா. நீங்க உடனே டில்லி சென்று அங்கே யாராவது காலில் விழுந்து காரியம் சாதிக்க வேண்டும்.
சம்பந்தர் ஐயா - போகலாம்தான். ஆனால் இப்ப அங்கே குடியுரிமை மசோதா பிரச்சனை நடந்து கொண்டு இருக்கு. எனவே கட்டாயம் என்னிடம் ஈழ அகதிகள் பற்றி பத்திரிகைக்காரங்கள் கேள்வி கேட்பாங்களே? அதை எப்படி சமாளிப்பது?
சுமந்திரன் - என்ன ஐயா இதெல்லாம் ஒரு பிரச்சனையா உங்களுக்கு? யாழ்ப்பாணத்தில் சொன்னது மாதிரி “இந்திய அரசை சந்தேகிக்க கூடாது” என்று சொல்லி விடுங்களேன்.
சம்பந்தர் ஐயா - யாழ்ப்பாணத்தான் நான் என்ன சொன்னாலும் பேசாமல் இருப்பான். ஆனால் இந்தியாக்காரன் அப்படி இருக்க மாட்டானே? சரி. பார்ப்பம். மருத்துவ சிகிச்சைக்கு வந்துள்ளேன் என்று கூறி சமாளிப்பம்.
சுமந்திரன் - நான் வழக்கம்போல் “மோடி அழைத்துதான் ஐயா இந்தியா சென்றார்” என்று செய்தியை கசிய விடுகிறேன். அதேபோல் நீங்கள் திரும்பி வந்ததும் “மோடி கோத்தபாயாவை தொலைபேசியில் மிரட்டினார்” என்றும் செய்தியை கசிய விடுகிறேன். அது உண்மை என்று நம்முடைய ஆய்வாளர்கள் ஆய்வு கட்டுரை எழுதுவார்கள். அப்படியே காலம் கடந்து விடும் . அடுத்தது, நீங்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து “இந்திய உதவியுடன் புலிகளை அழித்தது நல்லது” என்று கூறியது பெரிய பிரச்சனையாய் வரும்போல இருக்கு. எனவே கொஞ்ச நாளைக்கு இலங்கைப் பக்கம் வராமல் அப்படியே இந்தியாவில நிற்கப் பாருங்கோ.
குறிப்பு - இது கற்பனையான உரையாடல்தான். ஆனால் உண்மையான உரையாடல் இதைவிட நகைச்சுவையானது.

No comments:

Post a Comment