Saturday, December 21, 2019

ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?

•ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?
காணி அதிகாரம் இல்லை
பொலிஸ் அதிகாரம் இல்லை
வடக்கு கிழக்கு இணைப்புகூட இல்லை
இதுதான் கோத்தா தமிழருக்கு வழங்கப்போகும் தீர்வு
இதைத்தான் அன்று மகிந்தாவும் கூறினார்.
அதைத்தான் இன்று கோத்தாவும் கூறுகிறார்.
ஆனால் கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை.
ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது.
ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.
தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறுகிறார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்குகிறது.
அப்படியென்றால் தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம்.
ஆனால் எமது தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment