Monday, January 31, 2022

பழனிபாபா

•பழனிபாபா எம்.ஜி.ஆர் காலத்தில் பழனிபாபா பெயர் பத்திரிகைகளில் அடிபட்டதுண்டு. அதைவிட அவர் பற்றி வேறு எதுவும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் 1991ம் ஆண்டு மதுரை சிறையில் புரட்சி மணி என்ற ஆயள்சிறைவாசி பழனிபாபா பற்றி நிறைய தகவல்கள் கூறினார். அதில் அவர் கூறியவற்றில் முக்கியமான சுவாரசியமான ஒரு தகவல் இன்றும் என் நினைவில் உள்ளது. அதாவது சிறை விதிகள் சிறைவாவாசிகளின் உரிமைகள் சலுகைகள் அடங்கிய “ஜெயில் மனுவல்” என்னும் புத்தகத்தை ஜெயில் சுப்பிரண்டனிடம் வாங்கி படித்த முதல் சிறைவாசி பழனிபாபாதான். ஜெயில் மனுவலை படித்து அதில் இருக்கும் விபரங்களை சக கைதிகளுக்கு கூறி இன்று கைதிகள் அனுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் பலவற்றுக்கு அவரே காரணம். இதைக் கேட்டதும் எனக்கும் அந்த ஜெயில் மனுவலை பெற்று படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அப்போது மதுரை சிறை அடிஷனல் சுப்பிரண்டாக பாலன் அழகிரி இருந்தார். அவரிடம் சென்று ஜெயில் மனுவலைக் கேட்டேன். அப்போது அவரது அறையில் சாத்தூர் கே.கே.எஸ.ராமச்சந்திரன் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் தனது எதிரிகள் யாரோ தன்னை தாக்க என்னை அனுப்பியதாக நினைத்து பதட்டமடைந்தார். இதனால் அடிசனல் சுப்பிரண்டன் என்னை வெளியே அனுப்புவதற்காக உடனே நான் கேட்ட ஜெயில் மனுவல் புத்தகத்தை தந்துவிட்டார். எனக்கு நான் கேட்ட புத்தகம் கிடைத்துவிட்டது என்ற ஆச்சரியம் ஒருபுறம் இருக்க மறுபுறம் என்னால் கே.கே.எஸ.எஸ.ஆருக்கு பிரச்சனை வரக்கூடும் என் அஞ்சி அன்று இரவே அவரை வேறு சிறைக்கு மாற்றியது அதைவிட ஆச்சரியமாக இருந்தது. பழனிபாபா பற்றி பேச்சு வரும்போது கூடவே இந்த நினைவுகளும் எப்போதும் எனக்கு வருகின்றன.

No comments:

Post a Comment