Sunday, March 29, 2020

•சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று யார்?

•சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று யார்? சம்பந்தர் ஐயாவுக்கு வயசாயிடுச்சு. எனவே தலைமையை சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியில் சிலர் கூறுகின்றனர். சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் தமிழ் தேசியத்திற்கு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே இவர்களுக்கு மாற்றாக முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கொண்டு வரவேண்டும் என இன்னும் சிலர் கூறுகின்றனர். விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் சேர்ந்து இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார். எனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றாக முன் நிறுத்த வேண்டும் என வேறு சிலர் கூறுகின்றனர். இவர்கள் எல்லோரும் சம்பந்தர் ஐயாவுக்கு மாற்றாக வெவ்வேறு நபர்களை முன் நிறுத்தினாலும் சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று வேண்டும் என்பதில் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது சம்பந்தர் ஐயாவினால் தமிழருக்குரிய தீர்வு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் சம்பந்தர் ஐயாவினால் தீர்வு பெற முடியாமைக்கு காரணம் அவர் பயணம் செய்த தேர்தல் பாதையே என்பதை புரிந்து கொள்ள இந்த சிலர் தவறிவிட்டனர். தேர்தல் பாதையில் பயணம் செய்த தந்தை செல்வாவினால் தீர்வு பெற முடியவில்லை. தேர்தல் பாதையில் பயணம் செய்த அமிர்தலிங்கத்தால் தீர்வு பெற முடியவில்லை. தேர்தல் பாதையில் பயணித்த சம்பந்தா ஐயாவினால் தீர்வு பெற முடியவில்லை. எனவே சம்பந்தா ஐயாவுக்கு மாற்றாக விக்கினேஸ்வரனோ அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ வந்தாலும் அவர்களாலும் தேர்தல் பாதையில் சென்று தீர்வு பெற முடியாது என்பதே உண்மை. ஆதலால் தேர்தல் பாதையில் பயணிக்கும் சம்பந்தா ஐயாவுக்கு சரியான மாற்று என்பது ஆயுதப் போராட்டப்பாதையே ஆகும். எனவே எமக்கு தேவை முக மாற்றம் இல்லை. மாறாக தேவை கருத்து மாற்றமே! Image may contain: 2 people Image may contain: Shan Naranderan, beard and close-up Image may contain: 1 person, suit Image may contain: 1 person

No comments:

Post a Comment