Sunday, March 29, 2020

செய்தி - கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்

செய்தி - கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஊரடங்குச்சட்ட வேளையிலும் காணாமல்போனவர்களின் உறவுகள் போராட்டம் 1127வது நாளாக தொடர்கிறது. சிறுமி - சுமந்திரன் அங்கிள்! எப்போது எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள்? சுமந்திரன் - கொஞ்சம் பொறு பிள்ளை. நல்லாட்சி அரசிற்கு இரண்டு வருட அவகாசம் பெற்று கொடுத்தோம். சிறுமி- அந்த அவகாசத்தில் அவர்கள் கண்டு பிடிக்கவில்லையே அங்கிள்? சுமந்திரன் - அப்படியில்லை பிள்ளை. அப்புறமும் இரண்டு வருடம் அவகாசம் பெற்று கொடுத்தோம் அல்லவா.? சிறுமி - சரி. அப்ப எப்பதான் எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள் அங்கிள்? சுமந்திரன் - கண்டு பிடிப்பதற்காக அவகாசம் பெற்று கொடுக்கவில்லை பிள்ளை. நீங்கள் உங்கள் அப்பாவை மறப்பதற்காகதானே அவகாசம் பெறுகிறோம். சிறுமி - அப்போ நீங்கள் கண்டுபிடிக்க அவகாசம் பெறவில்லை. நாங்கள் மறப்பதற்காகத்தான் அவகாசம் பெறுகிறீர்கள். அப்படிதானே? சுமந்திரன் - கரெக்ட். நீ கெட்டிக்காரி யம்மா. சீக்கிரம் அப்பாவை மறந்திடும்மா! அல்லது ஒவ்வொருவராய் செத்திடுங்கள். சிறுமி - அப்புறம் எதற்காக இந்த முறையும் தேர்தலில் போட்டியிட்டு பதவி பெற முயல்கிறீர்கள்? சுமந்திரன் - அம்பிகா அன்ரியை எம்.பி யாக்க வேண்டும் அல்லவா? சிறுமி - அம்பிகா அன்ரி இத்தனை நாளும் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை. இனி எம்.பி யானால் செய்வார் என்று எப்படி நாங்க நம்புறது? சுமந்திரன் - நீங்க வீட்டு சின்னத்தில் வோட்டுப் போட்டால் சம்பந்தர் ஐயாவுக்கு மட்டுமல்ல அம்பிகா அன்ரிக்கும் கொழும்பில் சொகுசு வீடு கிடைக்கும் அல்லவா? குறிப்பு - உரையாடல் கற்பனைதான் ஆனால் உரையாடிய விடயங்கள் உண்மையே. Image may contain: 4 people, people sitting

No comments:

Post a Comment