Sunday, March 29, 2020

•வன்மையான கண்டனங்கள்!

•வன்மையான கண்டனங்கள்! நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடையர் கும்பலொன்று நுழைந்து அங்கு பலாத்காரமாக அமர்ந்து மதுபானம் அருந்த முற்பட்டபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கொலை செய்துள்ளனர். கெக்கிராவ, கணேவள்பொளயைச் சேர்ந்த 33 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் என்பவர் அநியாயமாக வெட்டப்பட்டு ஸ்தலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த ஹோட்டலில் வேலைசெய்து வந்தவர். சம்பவத்தில் நேரடியாகத் தலையிடாமல் இருந்துள்ள நிலையிலும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் உட்பட இன்னும் இருவர் மருத்துவமனையில் உள்ளனர். இதுவே ஒரு சிங்கள கடையில் முஸ்லிம் காடையர் புகுந்து ஒரு சிங்கள இளைஞரைக் கொன்றிருந்தால் இந்நேரம் நீர்கொழும்பே பற்றி எரிந்திருக்கும். தெருவோரத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வாழைப்பழக்கடையைக்கூட எரித்திருப்பார்கள். ஆனால் இறந்திருப்பது முஸ்லிம் இளைஞர் என்பதால் அரசு மௌனமாக இருக்கிறது. பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்கள்கூட எந்தக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பதவி பெறலாம் என்பதில்தான் அக்கறையாக இருக்கிறார்களேயொழிய தமது இன மக்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை அற்று இருக்கின்றனர். இப்போது இருக்கும் கோத்தபாயா அரசு தனது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அப்பட்டமாகவே காட்டத் தொடங்கிவிட்டது. இதனை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். Image may contain: one or more people

No comments:

Post a Comment