Sunday, March 29, 2020

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்

• மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன. Image may contain: தென்னரசு தென்னரசு

No comments:

Post a Comment