Sunday, March 29, 2020

• இவர்கள் தியாகம் மறக்க முடியுமா?

• இவர்கள் தியாகம் மறக்க முடியுமா? ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. ஏனெனில் 7 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை எனில் அதற்கு ஓரே காரணம் அந்த ஏழு கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக ஏழு கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார். குறிப்பு - சுமந்திரனை போராளி என்றும் அவர் காசுக்கு வழக்கு பேசியதை மாபெரும் தியாகம் என்றும் எழுதுவோர் இந்த இருவர் தியாகத்தை அறிவார்களா? Image may contain: 1 person

No comments:

Post a Comment