Sunday, March 29, 2020

• நினைவு கூர்வோம்!

• நினைவு கூர்வோம்! ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 11வது நினைவு நாள் இன்றாகும். மாரிமுத்து என்பவர் "இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 22.03.2009 அன்று இரவு வீட்டு வாசலில் முன்பு தீக்குளித்து மரணமடைந்தார். பாலசுந்தரம் என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பதாகைகளை அமைத்தார் ஆனால் காவல்துறை அவற்றை அகற்றினர். இதையடுத்து 22.03.2009 அன்று மதியம் 12 மணியளவில் தீக்குளித்து மரணமடைந்தார். இவ்வாறு மொத்தம் 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. புலிகள் ராஜிவ் காந்தியைக் கொன்றதால்தான் சோனியாவின் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு அக்கறை எடுக்கவில்லை என்றார்கள். இப்போது இருப்பது சோனியாவின் அரசு இல்லை. இப்போது இருப்பது மோடியின் அரசு. இப்போது புலிகளும் இல்லை. ஆனாலும் இப்பவும் இந்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொள்ளவில்லையே? இந்த 16 தமிழரின் உயிர் தியாகம் இன்றும் எமக்கு கூறும் முக்கிய செய்தி என்னவெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளாது என்பதே.. இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வதே இவர்களுக்கு செய்யும் நினைவு அஞ்சலியாக இருக்கும். Image may contain: 1 person, text Image may contain: 1 person, text

No comments:

Post a Comment