Saturday, March 27, 2021

கரடியே காரித் துப்பிவிட்டது!

•கரடியே காரித் துப்பிவிட்டது! கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை. எனவே சம்பந்தர் ஐயா பதவி விலகி இளையவர்களுக்கு வழி விட வேண்டும் என கடந்த தேர்தலின் போது நான் பதிவு செய்திருந்தேன். அப்போது சுமந்திரன் விசுவாசிகள் சிலர் நான் அநாகரீமாக கருத்து பதிவதாக எகிறிக் குதித்தார்கள். இப்போது சுமந்திரனே “இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் கட்சி 20 சீட் பெற்றிருக்கும்” என்றும் “இளையவர்களுக்கு வாய்ப்பளித்தல் என்பதை சட்டமாக கொண்டு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தமிழரசுக்கட்சியின் கனடா பொறுப்பாளரான தங்கவேலு அவர்களும் “தமிழ்தேசிய கூட்டமைப்பு முதியவர்களின் கூடாரமாகிவிட்டது” என்று கூறியிருக்கிறார். சரி இப்போது இந்த பதிவின் நோக்கத்திற்கான விடயத்திற்கு வருகிறேன். கடந்த தேர்தலின்போது கனடாவில் இருந்து வந்த பணத்திற்கு கணக்கு எங்கே என யாழ் மாவட்ட மகிளிர் அணி பொறுப்பாளர் ஒருவர் கேட்டிருந்தார். உடனே அவர் மீது ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார் சுமந்தின். அவ்வேளை கனடா பொறுப்பாளர் தங்கவேலு அவர்களும் சுமந்திரனுக்கு சார்பாக கருத்து தெரிவித்திருந்தார். இப்போhது அதே தங்கவேலு அவர்கள் கட்சியின் பத்திரிகைக்கு 35 லட்சம் ரூபா பணம் அனுப்பியதாகவும் ஆனால் பத்திரிகை வெளியிடவில்லை என்றும் அப் பணத்திற்கு என்ன நடந்தது என்றும் கேட்டிருக்கிறார். இப்போது சுமந்திரன் என்ன கூறப்போகிறார்? கணக்கு காட்டப் போகிறாரா அல்லது தங்கவேல் மீதும் ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு வழக்கு தொடரப் போகிறாரா?

No comments:

Post a Comment