Saturday, March 27, 2021

இந்த முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு

இந்த முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு எந்த வேலை இலாபத்தை தருகிறதோ அந்த வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் மற்றும் தாய்மார்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் கடுமையான உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இந்த இரக்கமற்ற யதார்த்தத்தை தெளிவாக கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்று ரோசா லக்சம்பேர்க் கூறினார். அவர் இவ்வாறு கூறி சுமார் 100 வருடங்களின் பின்னர் இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் இதுபற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. வீட்டில் குடும்ப வேலைகளை கவனிக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் தாம் பதவிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்புடும் என அறிவித்தார். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாம் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வழங்குவோம் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் ஆறு லட்சத்து கோடி ரூபா ஆகும். இந்நிலையில் இவ்வாறு பெண்களுக்கு பணம் வழங்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் கொடுப்பார்களோ இல்லையோ ஆனால் வீட்டு வேலைகளை கவனிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியமாக பணம் வழங்க வேண்டும் என்ற சிந்தனை ஆரம்பித்தமை வரவேற்கப்பட வேண்டியதே.

No comments:

Post a Comment