Saturday, March 27, 2021

சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடி சொற்கள் உள்ளது.

சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடி சொற்கள் உள்ளது. ஆனால் தமிழில் 1.24 லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளது. – ஆடிட்டர் குருமூர்த்தி தமிழ்நாட்டில் பிழைக்க வந்ததோடு தமிழில் துக்ளக் இதழ் வெளியிட்டு காசு சம்பாதித்துக்கொண்டு சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கிறார். செத்த சமஸ்கிருத மொழியில் பற்று இருந்தால் துக்ளக் இதழை சமஸ்கிருத மொழியில் வெளியிட வேண்டியதுதானே? பணம் சம்பாதிப்பது தமிழ் மொழியில். ஆனால் விசுவாசம் காட்டுவது சமஸ்கிருத மொழிக்கு. கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு மோடி அரசு வழங்கிய தொகை 160 கோடி ரூபா. ஆனால் தமிழ் மொழிக்கு வழங்கிய தொகை வெறும் 6 கோடி ரூபா மட்டுமே. ஆனால் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும்போது திருக்குறள் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.

No comments:

Post a Comment