Sunday, October 29, 2023

வன்னியில் ஒருநாள் வழக்கம்போல்

வன்னியில் ஒருநாள் வழக்கம்போல் சிங்கள அரசின் விமானம் மக்கள் மீது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிறுவன் கோவத்தில் அருகில் நின்ற போராளியிடம் “அண்ணே அதை சுடுங்க” என்று கேட்டான். அதற்கு அந்த போராளி “அது ரொம்ப உயரத்தில் பறக்கிறது. இந்த துப்பாக்கியால் அதை சுட முடியாது” என்றார். அதற்கு அந்த சிறுவன் “அப்ப இந்த விமானங்களை சுடக்கூடிய துப்பாக்கி உங்களிடம் இல்லையா?” என்று கேட்டான். அப்போது அந்த போராளி “எம்மிடம் இப்ப இல்லை. அது வாங்க ரொம்ப காசு வேணும்” என்றார். சிறிது யோசித்த சிறுவன் “பறக்கும்போது சுட முடியாது என்றால் பறந்து முடிய ஒரு இடத்தில் இறங்கி நிற்கும்தானே, அப்ப சுடலாம் தானே?” என்று கேட்டான். அந்த போராளி இந்த சிறுவனின் கேள்வியை தன் தலைமைக்கு அனுப்பினார். இந்த சிறுவனின் கேள்வியே விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் அநுராதபுரம் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு சென்று தாக்கும் யோசனையை தலைமைக்கு கொடுத்தது. விமான நிலையங்களை சென்று தாக்கும் திட்டத்திற்கு ஒரு சிறுவனே காரணம் எனபது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் மனிதன் என்பவன் ஒரு சமூக பிராணி. அவன் தான் சார்ந்துள்ள சமூக சூழ்நிலையையே பிரதிபலிப்பான். இதற்கு சிறந்த உதாரணம், தோழர் ஸ்டாலின் காலத்தில் ரஸ்சியாவுக்கு சென்ற இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவர் அங்குள்ள ஒரு சிறுவர் பாடசாலையை பார்வையிட சென்றார். அங்கு அவர் சிறுவர்களிடம் ஐந்து ரூபாய் பொருள் ஒன்றை எட்டு ரூபாய்க்கு விற்றால் என்ன கிடைக்கும் என்று கேட்டார்? மாணவர்கள் மூன்று ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறுவார்கள் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த மாணவர்கள் ஆறு மாதம் தண்டனை கிடைக்கும் என்றார்கள். ஆம். பொருட்களை இப்படி அதிக விலைக்கு விற்பது குற்றம் என்று அப்போது மாணவர்களுக்கு படிப்பிக்கப்பட்டது. அதையே மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள். நீதி – நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ அதை முதலில் மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

No comments:

Post a Comment