Sunday, October 29, 2023

பாகிஸ்தானும் இந்தியாவும்

பாகிஸ்தானும் இந்தியாவும் எதிரி நாடுகள். ஆனால் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுட்டுக் கொல்வதில்லை. இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள். ஆனால் இதுவரை 600ற்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக இந்திய அரசு கருதுவதில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு பயிற்சியும் போர்க்கப்பலும் வழங்குகிறது இந்திய அரசு. தமிழக மக்களின் வரிப்பணத்தை தமிழக மக்களை கொல்லும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு சிங்கள அரசுக்கு உதவி வழங்கக்கூடாது என தமிழக முதல்வர் இதுவரை கோரியதில்லை. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் அவர் கோரியதில்லை. தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் நேரடியாக பேசினால் இப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இப் பேச்சுவார்த்தைக்கு சிஙகள அரசுகூட சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு மறுத்து வருகிறது. ஏனெனில் திமுக வில் இருக்கும் டி.ஆர் பாலு போன்ற பெரிய படகு முதலாளிகள் இப் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை. அவர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் நேரடியாக பேசுவதை தடுக்கின்றன. தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனை பெரிதாகி மோதல் ஏற்பட வேண்டும் என இந்திய அரசும் தமிழக அரசும் விரும்புகின்றன. ஏனெனில் இதன் மூலம் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை நீக்க முடியும் என அவை நினைக்கின்றன.

No comments:

Post a Comment