Friday, October 20, 2023

சர்வதேச விலங்குகள் தினம்!

•சர்வதேச விலங்குகள் தினம்! ( இது அரசியல் பதிவு இல்லை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் திகதி சர்வதேச விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் விலங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் தன் நாய்க்கு தமிழ் தெரியும் என்றும் தான் தமிழில் கூறுவதை அது புரிந்து செயற்படுவதற்கு 6 மாதம் எடுத்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நாய் “ இந்த மனிதனுக்கு எனது மொழி புரிய 6 மாதம் எடுத்திருக்கிறது”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டதாம். இது பகிடிதான். ஆனால் இது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே மொழி என்கிறார்கள். அப்படியென்றால் விலங்குகளும் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தமக்கு ஒரு மொழி வைத்திருக்கின்றனவா? விலங்கிற்கு மொழி இருக்கிறதா இல்லையா என்பதைவிட விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா என்பது என் மூளையைக் குடைகிறது. ஏனெனில் உதாரணத்திற்கு ஒரு பன்றி தன் 20 குட்டிகளை எப்படி நினைவில் கணக்கு வைத்திருக்கும்? குறிப்பு - இங்குள்ள படங்களை பார்த்துவிட்டு நான் விலங்குகளை கேவலப்படுத்திவிட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தயவு செய்து என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment